சிவனின் ஜந்து முகங்கள்


சிவனின் ஜந்து முகங்கள்
x

ஈசனின் ஐந்து முகங்களையும் அவற்றில் இருந்து வெளிப்பட்ட 25 வடிவங்களையும் இங்கே பார்க்கலாம்.

சதாசிவ மூர்த்தியின் ஆயிரத்தில் ஒரு கூறிலிருந்து தோன்றியவரே மகேசர். இவரிடம் இருந்து வெளிப்பட்ட தோற்றங்கள் 'மகேச வடிவங்கள்' என்று அழைக்கப்படுகின்றன. இவரே படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகியவற்றை நேரடியாக இயக்குகிறார். இந்த ஐந்தொழில்களுக்கும் ஐந்து முகங்கள் இருக்கின்றன. இவற்றில் இருந்து தோன்றிய 25 வடிவங்கள் 'மகேச வடிவங்கள்'. இந்த வடிவங்களுக்குதான் உருவத் திருமேனிகள் காணப்படுகின்றன. தவறு செய்யும் அடியவர்களைத் தண்டிக்கவும், அடியவர்களுக்கு உதவி செய்து காக்கவும் என்று பல திருவிளையாடல்களுக்காக எடுத்த வடிவங்களே இவை அனைத்தும். ஈசனின் ஐந்து முகங்களையும் அவற்றில் இருந்து வெளிப்பட்ட 25 வடிவங்களையும் இங்கே பார்க்கலாம்.

சத்யோஜாதம்

சத்யோஜாத முகத்தில் இருந்து தோன்றியவர்கள்

* லிங்கோத்பவர்

* சுகாசனர்

* உமா மகேசுவரர்

* சங்கர நாராயணர்

* அர்த்தநாரீசுவரர்

வாமதேவம்

வாமதேவ முகத்தில் இருந்து தோன்றியவர்கள்

* கங்காளர்

* சக்ரதானர்

* கஜமுக அனுக்ரஹர்

* சண்டோ அனுக்ரஹர்

* ஏக பாதர்

அகோரம்

அகோர முகத்தில் இருந்து தோன்றியவர்கள்

* கஜ சம்ஹாரமூர்த்தி

* வீரபத்ரர்

* தட்சிணாமூர்த்தி

* கிராதமூர்த்தி

* நீலகண்டர்

தத்புருஷம்

தத்புருஷம் என்னும் முகத்தில் இருந்து தோன்றியவர்கள்

* பிட்சாடன மூர்த்தி

* காமதகனர்

* கால சம்ஹாரர்

* ஜலந்தரவதர்

* திரிபுராந்தகர்

ஈசானம்

இம்முகத்தின் மூலம் ஆகம ரகசியப் பொருளினைக் கேட்டு அறிந்தனர், அறுபத்தாறு முனிவர்கள். ஈசான முகத்தில் இருந்து தோன்றியவர்கள்.

* சோமாஸ்கந்தர்

* நடராஜர்

* ரிஷபாரூடர்

* கல்யாண சுந்தரர்

* சந்திர சேகரர்

1 More update

Next Story