கோகுலாஷ்டமி விழா


கோகுலாஷ்டமி விழா
x

வாசுதேவநல்லூரில் கோகுலாஷ்டமி விழா நடைபெற்றது

தென்காசி

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் யூனியன் முள்ளிக்குளம் கிராமம் கிருஷ்ணர்கோவில் கோகுலாஷ்டமி விழா நடைபெற்றது. இதையொட்டி சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டி, வழுக்குமரம் ஏறுதல், விளக்கு பூஜை, இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, பரிசு வழங்கப்பட்டது. கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு பக்தர்கள் தீர்த்த குடம், பால்குடம் ஊர்வலம் நடந்தது. பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செய்தனர். இரவு செண்டை மேளம், வாணவேடிக்கையுடன் ஸ்ரீகிருஷ்ணர் பூந்தேரில் ரதவீதிகளில் பவனி வந்தார். அன்னதானம் வழங்கப்பட்டது, அதனைத்தொடர்ந்து மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவுபெற்றது.


1 More update

Next Story