சிவன் கோவில்களில் சனிப்பிரதோஷ வழிபாடு


சிவன் கோவில்களில்  சனிப்பிரதோஷ வழிபாடு
x

சிவன் கோவில்களில் சனிப்பிரதோஷ வழிபாடு நடந்தது.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சிவன் கோவில்களில் நேற்று சனிப்பிரதோஷ சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கோபி பச்சைமலை கோவிலில் உள்ள மரகத ஈஸ்வரருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதேபோல் நந்திக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. அதன்பிறகு உற்சவ மூர்த்தியை பக்தர்கள் பல்லக்கில் வைத்து ஊர்வலமாக சுமந்து சென்றனர். பின்னர் மகாதீபாராதனை நடந்தது.

இதேபோல் கோபி காசி விஸ்வநாதர் கோவில், பாரியூர் அமரபனீஸ்வரர் கோவில், மொடச்சூர் சோமேஸ்வரர் கோவில், பவளமலை காசி விஸ்வநாதர் கோவில், கோபி விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர் கோவில், நஞ்சுண்டேஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர், பவானி சங்கமேஸ்வரர், அம்மாபேட்டை சொக்கநாதர், ஊஞ்சலூர் நகேஸ்வரர், கொந்தளம் நாகேஸ்வரர், கொளாநல்லி பாம்பலங்காரேஸ்வரர் கோவில்களிலும் நேற்று மாலை சனிப்பிரதோஷ சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

1 More update

Related Tags :
Next Story