இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x
தினத்தந்தி 13 Feb 2024 1:25 AM GMT (Updated: 14 Feb 2024 12:57 AM GMT)

கன்னி ராசிக்காரர்களுக்கு கல்யாண முயற்சி கைகூடும் நாள்.

இன்றைய பஞ்சாங்கம்:

சோபகிருது வருடம் மாசி மாதம் 1-ந்தேதி செவ்வாய்க்கிழமை.

திதி: சதுர்த்தி திதி இரவு(7.57)க்கு மேல் பஞ்சமி திதி.

நட்சத்திரம்: உத்திரட்டாதி நட்சத்திரம் மாலை(5.28)க்கு மேல் ரேவதி நட்சத்திரம்.

யோகம்: அமிர்தயோகம் மாலை(5.28)க்கு சித்தயோகம். மேல்நோக்குநாள்.

சூலம்: வடக்கு

ராகுகாலம்: மதியம் 3.00 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம்: காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை

நல்ல நேரம்: காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் மதியம் 4.30 மணி முதல் 5.30 மணி வரை

இன்றைய ராசிபலன்:

மேஷம்: பரபரப்பாக செயல்படும் நாள். பாதியில் நின்ற பணிகளை விரைந்து முடிப்பீர்கள். எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறும். தொழிலில் பங்குதாரர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும்.

ரிஷபம்: தேவைகள் பூர்த்தியாகும் நாள். திடீர் வரவு உண்டு. புத்துணர்ச்சியோடு செயல்படுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு. தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.

மிதுனம்: யோகமான நாள். தொழில் ரீதியாக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். சொந்தபந்தங்களின் பாராட்டு மழையில் நனையும் வாய்ப்பு உண்டு. நண்பர்கள் நாணயமாக நடந்து கொள்வர்.

கடகம்: உற்சாகத்துடன் செயல்படும் நாள், உள்ளம் மகிழும் செய்தியொன்று உறவினர்கள் மூலம் வந்து சேரும். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். கடன்சுமை குறையும்.

சிம்மம்: வாய்ப்புகள் கைநழுவி செல்லும் நாள். வரவைவிட செலவு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் செயல்பாடுகளில் குறை கண்டுபிடிப்பர். திட்டமிட்ட காரியங்கள் திசைமாறி செல்லலாம்.

கன்னி: மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. வாகன மாற்றம் செய்ய எடுத்த முயற்சி பலன் தரும். உத்தியோக ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம். நட்பு பகையாகலாம்.

துலாம்: பொருளாதார பற்றாக்குறை அகலும் நாள். புதிதாக தொழில் தொடங்கும் சிந்தனை மேலோங்கும். பொது பிரச்சினைகளில் யோசித்து தலையிடவும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம் பெறுவீர்கள்.

விருச்சிகம்: உதவிக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை உயரும் நாள். வருமானம் திருப்தி தரும். வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும். அடிப்படை வசதிகளை பெருக்கிக்கொள்வீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு.

தனுசு: சான்றோர்களின் சந்திப்பு கிட்டும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். பணம் பல வழிகளிலும் வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்வர்.

மகரம்: தாராளமாக செலவிட்டு மகிழும் நாள். தனவரவு திருப்தி தரும். வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திடீர் பயணம் உண்டு. மருத்துவ செலவு ஏற்படலாம்.

கும்பம்: சந்தோஷ வாய்ப்புகளை சந்தித்து மகிழும் நாள். தொழிலை விரிவுபடுத்த புதிய யுக்திகளை கையாள்வீர்கள். இடம், பூமி சம்பந்தப்பட்ட வகையில் லாபம் கிட்டும். பிள்ளைகளால் பெருமை உண்டு.

மீனம்: வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும் நாள். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும். விட்டுப்போன உறவுகள் விரும்பி வந்து சேரும்.

சந்திராஷ்டமம்: சிம்மம்.


Next Story