கல்யாண ஆஞ்சநேயர்


கல்யாண ஆஞ்சநேயர்
x

சூரிய பகவான், தன்னுடைய மகள் சுவாச்சலாவை, தன் மாணவனான ஆஞ்சநேயருக்கு மணம் முடித்து வைத்தார் என்று சூரிய புராணம் சொல்கிறது.

ராமாயணத்தில் ராமரின் முதன்மையான பக்தராகவும், அவரின் தூதனாகவும் இருந்தவர் அனுமன். சிறு வயதில் அனுமனுக்கு குரு வாக இருந்து அனைத்து கலைகளையும் கற்றுக்கொடுத்தவர், சூரிய பகவான். அவரிடம் கல்வி, இசை, வேதங்கள் என அனைத்தையும் கற்றுத் தேர்ந்த அனுமன், 'நவவியாகரண பண்டிதன்' என்ற பட்டமும் பெற விரும்பினார். ஆனால் நவவியாகரணத்தை கற்கும் நபர் குடும்பஸ்தனாக இருக்க வேண்டும் என்பது நியதி. எனவே சூரிய பகவான், தன்னுடைய மகள் சுவாச்சலாவை, தன் மாணவனான ஆஞ்சநேயருக்கு மணம் முடித்து வைத்தார் என்று சூரிய புராணம் சொல்கிறது.

சென்னை- செங்கல்பட்டு சாலையில், தைலாவரம் என்னும் திருத்தலத்தில், இந்த கல்யாண ஆஞ்சநேயரை தரிக்கலாம். இங்கு மூலவராக 8 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் ஸ்ரீஜெயவீர ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் தனிச் சன்னிதியில் உற்சவராக சுவர்ச்சலாதேவியுடன், பத்மபீடத்தில் கல்யாண ஆஞ்சநேயர் வீற்றிருப்பதைக் காணலாம். நான்கு திருக்கரங்களைக் கொண்ட இந்த ஆஞ்சநேயர், பெருமாளைப் போல தன் கரங்களில் சங்கு, சக்கரத்தையும் ஏந்தியிருக்கிறார்.


Next Story