இறந்தவர்களின் நினைவகம்

போலந்து நாட்டில் கப்லிகா க்ஸாஸெக் என்ற இடத்தில் உள்ள தேவாலயம் இறந்தவர்களுக்கான ஒரு ஆலயமாகவும், வாழ்பவர்களுக்கான நினைவகமாகவும் இருப்பதாக கருதப்படுகிறது.
போலந்து நாட்டில் கப்லிகா க்ஸாஸெக் என்ற இடத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற ஒரு தேவாலயத்தைத்தான் இங்கே நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்த தேவாலயத்தின் மேற்கூரை மற்றும் சுற்றுச்சுவர்களில் மண்டை ஓடுகளும், எலும்புகளும் பதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் நிஜமான மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகள் என்பது குறிப்பிடத்தக்கது. 1776-ம் ஆண்டுக்கும் 1804-ம் ஆண்டுக்கும் இடையில் வாழ்ந்த மதகுரு வாக்லவ் டொமாசெக் என்பவரால் இந்த கட்டிட அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.
போர்களிலும், காலரா போன்ற கொடிய நோய்களால் வதைபட்டும் இறந்து போனவர்களின் கல்லறைகளில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களில் மண்டை ஓடுகள் மற்றும் கால் எலும்புகளைக் கொண்டு இந்த வடிவமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த தேவாலயம் இறந்தவர்களுக்கான ஒரு ஆலயமாகவும், வாழ்பவர்களுக்கான நினைவகமாகவும் இருப்பதாக கருதப்படுகிறது.






