மயிலாப்பூர் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் ரூ.3 கோடியில் கருங்கல் மண்டபம்


மயிலாப்பூர் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் ரூ.3 கோடியில் கருங்கல் மண்டபம்
x

மயிலாப்பூர் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பேயாழ்வார் கோவிலில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கருங்கல் முன் மண்டபம், மடப்பள்ளி, அலுவலக கட்டிட பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார்.

மேலும், திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரர் கோவிலில் ரூ.72.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய மரத்தேர் உருவாக்கும் பணியையும் தொடங்கி வைத்தார்.

பின்னர் நிருபர்களுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இதுவரையில் 1,075 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதுவரை ரூ.5,213 கோடி மதிப்பிலான 5769.60 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் 87 கோவில்களிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சிகளில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளீதரன், பெருநகர சென்னை மாநகராட்சி பணிகள் குழு தலைவர் என்.சிற்றரசு, சென்னை மண்டல இணை ஆணையர் கி.ரேணுகாதேவி, மண்டல குழு தலைவர் எஸ்,மதன்மோகன், துணை ஆணையர்கள் ஹரிஹரன், சி.நித்யா, அறங்காவலர் ராமானுஜம், செயல் அலுவலர் கங்கா தேவி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story