காசி விசாலாட்சி அம்மன்-காசி விஸ்வநாதர் கோவில் குடமுழுக்கு விழா


காசி விசாலாட்சி அம்மன்-காசி விஸ்வநாதர் கோவில் குடமுழுக்கு விழா
x

காசி விசாலாட்சி அம்மன்-காசி விஸ்வநாதர் கோவில் குடமுழுக்கு விழா

தஞ்சாவூர்

ஒரத்தநாடு:

ஒரத்தநாடு காசி விசாலாட்சி அம்மன், காசி விஸ்வநாதர் கோவில் குடமுழுக்கு விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

குடமுழுக்கு விழா

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு முத்தம்பாள்புரம் காசி விசாலாட்சி அம்மன் சமேத காசி விஸ்வநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் நகர் வாசிகளால் திருப்பணிகள் செய்யப்பட்டு குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது.

யாகசாலை பூஜைகள் நிறைவடைந்ததும், யாத்ராதானம் கடம் புறப்பட்டு, கோவில் கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.

தொடர்ந்து மூலஸ்தான குடமுழுக்கு, தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். குடமுழுக்கையொட்டி பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

திருக்கல்யாணம் வீதி உலா

குடமுழுக்கு நிறைவடைந்ததும் நேற்று மாலை திருக்கல்யாணமும், தொடர்ந்து சாமி வீதி உலாவும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


Next Story