கிருஷ்ணம்பாளையம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில்திருவிழாவையொட்டி பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்

கிருஷ்ணம்பாளையம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் திருவிழாவையொட்டி பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம் எடுத்து வந்தனா்.
ஈரோடு
ஈரோடு கிருஷ்ணம்பாளையம் சிந்தன் நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த 11-ந்தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று காலை 6 மணிக்கு பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தக்குடம், பால்குடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.
சில பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், அலகு குத்தி வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். அதைத்தொடர்ந்து மதியம் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு கோவில் முன்பு பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைக்கிறார்கள். பின்னர் மாவிளக்கு பூஜை நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) சமயபுரம் மாரியம்மன் மலர் பல்லக்கில் தேர் திருவீதி உலா வருகிறார். நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மறுபூஜையுடன் திரு விழா நிறைவடைகிறது.
Related Tags :
Next Story






