முருகன், அய்யனார், அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம்


முருகன், அய்யனார், அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம்
x

புதுக்கோட்டை, இலுப்பூர், அரிமளம், ஆவூர், வடகாட்டில் உள்ள முருகன், அய்யனார், அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை:

முருகன் கோவில்

புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் வடகரையில் வள்ளி தேவசேனா சமேத வந்தமர்ந்த முருகன் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி கடந்த 11-ந் தேதி கணபதி ஹோமத்துடன் பூர்வாங்க பூஜை தொடங்கியது. தொடர்ந்து யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. விழாவையொட்டி கும்பாபிஷேகம நடைபெற்றது. இதையொட்டி கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டன. சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அன்னவாசல்

இலுப்பூர் அருகே வெள்ளாஞ்சார் கிராமத்தில் புலிக்குத்தி அய்யனார், முத்து கருப்பர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து யாகசாலையில் கலசங்களில் புனித நீர் ஊற்றி வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க அய்யனார் கோவில் மூலஸ்தான விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

அரிமளம்

அரிமளத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவையொட்டி யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கொண்டு கோவிலை சுற்றி வலம் வந்தனர். அதனை தொடர்ந்து விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஆவூர்

விராலிமலை ஒன்றியம், அக்கல்நாயக்கன்பட்டி பிள்ளையார் ஊரணியில் தேக்கமலையான் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் வேதமந்திரங்கள் முழங்க கருடபகவான் தரிசனத்தை தொடர்ந்து தேக்கமலையான் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வடகாடு

வடகாடு அருகே நெடுவாசல் கிராமத்தில் பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து பத்ரகாளியம்மன் கோவில் மூலஸ்தான கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story