காமாட்சி மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை


காமாட்சி மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
x

காமாட்சி மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் திட்டச்சேரியில் காமாட்சி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிளக்கு பூஜை நடைப்பெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு மற்றும் காமாட்சி விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர். முன்னதாக அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள்பொடி உள்ளிட்ட ெபாருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story