நவக்கிரக பரிகாரத் தலங்கள்
ஜாதகத்தில் கிரகங்களின் தாக்கத்தை வைத்தே ஒருவரின் வாழ்க்கை மற்றும் அவர்களின் பலன்கள் கணிக்கப்படுகின்றன.
நவக்கிரகங்கள் ஒன்பதுக்கும் தனித்தனி சிறப்பு உள்ளது. குறிப்பாக, ஜோதிடத்தில் நவக்கிரகங்களின் பங்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஜாதகத்தில் கிரகங்களின் தாக்கத்தை வைத்தே ஒருவரின் வாழ்க்கை மற்றும் அவர்களின் பலன்கள் கணிக்கப்படுகின்றன. எனவே, கிரக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த கிரகத்திற்குரிய பரிகாரத் தலங்களுக்குச் சென்று வழிபடலாம்.
* சூரியன்:- சூரியனார் கோவில், இளையான்குடிக்கு அருகே உள்ள சேத்தூர்.
* சந்திரன்:- திங்களூர், மானாமதுரை, திருவக்கரை, திருவிடைமருதூர், திருந்துதேவன்குடி.
* செவ்வாய்:- வைத்தீஸ்வரன் கோவில், தேவிப்பட்டிணம் அருகில் உள்ள பெருவயல்.
* புதன்:- திருவெண்காடு, மதுரை, மேலநெட்டூர், காசி.
* வியாழன்:- திருச்செந்தூர், ஆலங்குடி, தென்குடித்திட்டை, மேலப்பெருங்கரை, மாயூரம், திருத்தேவூர், சிவகங்கை மாவட்டம் இலுப்பைக்குடி, வாழகுருநாதன்.
* சுக்ரன்:- கஞ்சனூர், திருவாடானை, திருவேற்காடு, திருவரங்கம், திருவெள்ளியங்குடி.
* சனி:- திருநள்ளாறு, திருப்புகலூர், எமனேசுவரம், திருக்கொள்ளிக்காடு.
* ராகு:- திருநாகேஸ்வரம், காஞ்சியில் உள்ள திருவூரகம், நயினார்கோயில், திருக்காளத்தி.
* கேது:- கீழப்பெரும்பள்ளம், ராமேசுவரம் கொழுவூர்.