இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
இன்று ஸ்ரீவைகுண்ட ஏகாதசி சகல விஷ்ணு ஆலயங்களிலும் பரமபதவாசல் திறப்பு விழா.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மார்கழி-7 (சனிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: ஏகாதசி காலை 6.27 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம்: பரணி இரவு 10.34 மணி வரை பிறகு கார்த்திகை
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்றைய முக்கிய நிகழ்வுகள்
இன்று ஸ்ரீவைகுண்ட ஏகாதசி சகல விஷ்ணு ஆலயங்களிலும் பரமபதவாசல் திறப்பு விழா. திருநெல்வேலி நெல்லையப்பர் புறப்பாடு. வீரவநல்லூர் சுவாமி குதிரை வாகனத்திலும் அம்பாள் அன்ன வாகனத்திலும் திருவீதி உலா. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் முத்தங்கி சேவை. சகல விஷ்ணு ஆலயங்களிலும் ராப்பத்து உற்சவ சேவை. திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.
இன்றய ராசிபலன்
மேஷம்
முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். முக்கிய புள்ளிகளால் முன்னேற்றம் ஏற்படும். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியை கொண்டுவந்து சேர்ப்பர். பணத்தேவைகள் பூர்த்தியாகும். திருமண பேச்சுகள் முடிவாகும்.
ரிஷபம்
நட்பால் நல்ல காரியம் நடை பெறும் நாள். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரை இன்று திடீரென சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். ஆடை, ஆபரண பொருட்களை வாங்கி சேர்ப்பதில் ஆர்வம் கூடும்.
மிதுனம்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். தொழில் பங்குதாரர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சேமிப்பு கரையும். வாகன மாற்றம் செய்ய முன்வருவீர்கள்.
கடகம்
தன்னம்பிக்கையுடன் செயல்படும் நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்கள் அனுகூலம் தருவதாக அமையும்.
சிம்மம்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். உத்தியோகம் சம்பந்தமாக அன்னிய தேச அழைப்புகள் ஆச்சரியப்பட வைக்கும். பிறருக்கு வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும்.
கன்னி
கோபத்தில் கூட்டாளிகள் விலகும் நாள். குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். எப்படியும் முடிந்து விடும் என நினைத்த வேலை ஒன்று முடியாமல் போகலாம்.
துலாம்
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் ஆதாயம் கிடைக்கும். விருந்தினர்களின் வருகை உண்டு. அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள்.
விருச்சிகம்
காரிய வெற்றி ஏற்படும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வருமானம் திருப்தி தரும். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பர்.
தனுசு
குழப்பங்கள் அகன்று குதூகலம் கூடும் நாள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் உருவாகும். மறைமுகப்போட்டிகளை முறியடிப்பீர்கள். ஆரோக்கிய பாதிப்புகள் அகலும். நட்பால் நல்ல காரியம் நடைபெறலாம்.
மகரம்
வருமான பற்றாக்குறை அகலும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்துமுடிப்பீர்கள். இல்லத்தில் சுபகாரிய பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள்.
கும்பம்
முயற்சிகள் கைகூடும் நாள். முக்கிய புள்ளிகளின் தொடர்பால் முன்னேற்றம் காண்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. வாங்கிய இடத்தால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும்.
மீனம்
உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசியவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். இழுபறி நிலையில் இருந்த வழக்கு முடிவிற்கு வரும். தொழிலில் வருமானம் உயரும்.