இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x
தினத்தந்தி 14 March 2024 6:55 AM IST (Updated: 14 March 2024 7:39 AM IST)
t-max-icont-min-icon

சிம்ம ராசிக்காரர்களுக்கு வருமானம் உயரும் நாள்.

இன்றைய பஞ்சாங்கம்:

சோபகிருது வருடம் பங்குனி மாதம் 1-ந்தேதி வியாழக்கிழமை.

திதி: சதுர்த்தி திதி காலை(6.34)க்கு மேல் பஞ்சமி திதி.

நட்சத்திரம்: பரணி நட்சத்திரம் இரவு(10.01)க்கு மேல் கார்த்திகை நட்சத்திரம்.

யோகம்: சித்தயோகம் இரவு(10.01)க்கு மேல் மரணயோகம். கீழ்நோக்குநாள்.

சூலம்: தெற்கு

ராகுகாலம்: மதியம் 1.30 மணி முதல் 3.00 மணி வரை

எமகண்டம்: காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை

நல்ல நேரம்: காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை மற்றும் மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை

இன்றைய தினப்பலன்:

மேஷம்: லாபகரமான நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். கடல் பயண வாய்ப்புகள் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் வெற்றி நடைபோடும்.

ரிஷபம்: யோகமான நாள். தொழில் முன்னேற்றமுண்டு. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. விவாக பேச்சுகள் நல்ல முடிவிற்கு வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

மிதுனம்: ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வருமானம் உயரும்.

கடகம்: விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். விரயங்களை சமாளிப்பீர்கள். கல்யாண கனவுகள் நனவாகும். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பர். தொழிலில் எதிர்பார்த்தபடியே லாபம் கிட்டும்.

சிம்மம்: எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். பொருளாதார நிலை உயரும். நீண்ட நாட்களாக தள்ளிப்போட்டு வந்த காரியமொன்று இன்று தானாக நடைபெறும். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

கன்னி: வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். வாகன வழியில் திடீர் செலவுகள் உண்டு. உத்தியோகத்தில் உங்களிடம் ஒப்படைத்த பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.

துலாம்: முயற்சி கைகூடும் நாள். முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். வாங்கல், கொடுக்கல்களில் ஆதாயம் கிடைக்கும். கவுரவம், அந்தஸ்து உயரும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் காண்பீர்கள்.

விருச்சிகம்: வளர்ச்சி கூடும் நாள். வருமானம் திருப்தி தரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்ள் வந்து சேரலாம். எடுத்த காரியம் எளிதில் முடிவடையும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு பற்றிய தகவல் வரலாம்.

தனுசு: இனிய செய்தி இல்லம் தேடி வரும் நாள். நண்பர்கள் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணை புரிவர். பெற்றோர் வழியில் பிரியம் கூடும். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.

மகரம்: தடைகள் அகலும் நாள். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கி கொள்வீர்கள். சகோதர விரோதம் மாறும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கும்பம்: நன்மைகள் நடைபெறும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் புகழ் கூடும். விவாகப்பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். தாமதப்பட்ட காரியங்கள் தடையின்றி நடைபெறும்.

மீனம்: பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பக்குவமாக பேசி காரியங்களை சாதித்து கொள்வீர்கள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. உத்தியோக முயற்சியில் வெற்றி கிட்டும்.

சந்திராஷ்டமம்: இரவு 3.53 வரை கன்னி: பிறகு துலாம்.


Next Story