தை அமாவாசையையொட்டிஈரோட்டில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு

தை அமாவாசையையொட்டி ஈரோட்டில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்தினாா்கள்.
ஈரோடு
தை அமாவாசையான நேற்று ஈரோடு காவிரி ஆற்றங்கரையில் ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்து, காவிரி ஆற்றில் புனித நீராடி, தங்களுடைய முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து, சிறப்பு பூஜைகள் செய்தனர்.
அதைத்தொடர்ந்து ஆற்றங்கரையில் இருந்த விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபட்டனர். பின்னர் முன்னோர்களுக்கு பிடித்த உணவை வீட்டில் சமைத்து படையலிட்டு, வழிபட்டனர். தை அமாவாசையையொட்டி ஈரோடு பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன், நடு மாரியம்மன், ஈஸ்வரன் கோவில், கஸ்தூரி அரங்கநாதர் கோவில், சோழீஸ்வரர் கோவில் உட்பட மாநகரில் உள்ள அனைத்து கோவில்களிலும் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story






