பெருமாள்பாளையம்கொம்பு தூக்கி அம்மன் கோவில் குண்டம் விழா


பெருமாள்பாளையம்கொம்பு தூக்கி அம்மன் கோவில் குண்டம் விழா
x

பெருமாள்பாளையம் கொம்பு தூக்கி அம்மன் கோவில் குண்டம் விழா நடந்தது.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் அருகே நகலூர் பெருமாள்பாளையம் வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற கொம்பு தூக்கி அம்மன் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுேதாறும் மாசி மாதம் குண்டம் விழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான கோவில் குண்டம் விழா கடந்த 15 நாட்களுக்கு முன்பு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக, அலங்காரத்துடன் பூஜை நடைபெற்றது.

நேற்று முன்தினம் காலை பொங்கல் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா மாலையில் நடந்தது. முன்னதாக அம்மன் அழைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து கோவில் பகுதியில் 40 அடி நீளம் உள்ள குண்டம் தயார் செய்யப்பட்டது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர்.

கோவில் வளாகம் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளதால் வனத்துறையினர் மற்றும் பர்கூர் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story