திருமலையில் ரத சப்தமி விழா கோலாகலம்- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்


திருமலையில் ரத சப்தமி விழா கோலாகலம்- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
x

காலை 9 மணி முதல் 10 மணி வரை சின்னசேஷ வாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருமலை:

திருமலையில் மினி பிரமமோற்சவம் என்று அழைக்கப்படும் ரத சப்தமி விழா இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. ஒரே நாளில் 7 வாகனங்களில் மலையப்பசாமி மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது, இந்த விழாவின் சிறப்பு ஆகும்.

அதன்படி, காலை 5.30 மணி முதல் 8 மணி வரை சூரிய பிரபை வாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளினார். 9 மணி முதல் 10 மணி வரை சின்னசேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

11 மணி முதல் 12 மணி வரை கருட வாகனத்திலும், மதியம் 1 மணி முதல் 2 மணி வரை அனுமந்த வாகனத்திலும் மாட வீதிகளில் மலையப்பசாமி வலம் வந்து அருள் பாலிக்கிறார்.

தொடர்ந்து மதியம் 2 மணி முதல் 3 மணி வரை சக்கர ஸ்நானம், மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்ப விருட்ச வாகனத்திலும், 6 மணி முதல் 7 மணி வரை சர்வபூபால வாகனத்திலும், இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திரபிரபை வாகனத்திலும் உலாவருகிறார்.

மலையப்ப சாமி வலம் வரும் மாட வீதிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.


Next Story
  • chat