வீழிநாத சாமி கோவில் திருக்கல்யாணம்

திருவீழிமிழலை வீழிநாத சாமி கோவில் திருக்கல்யாணம் நடந்தது.
குடவாசல்;
குடவாசல் அருகே உள்ள திருவீழிமிழலையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான வீழிநாத சாமி கோவில் உள்ளது. இக்்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் மக நட்சத்திரத்தில் கார்த்தியாயினி அம்பாள் -மாப்பிள்ளை சுவாமி (கல்யாண சுந்தரேஸ்வரர்) திருக்கல்யாணம் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை பெருவிழாவின் 6 ம் நாளான நேற்று சுவாமி- அம்பாளுக்கு பால், பன்னீர், தேன், திரவியம், பஞ்சாமிர்தம், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகிவற்றால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து சிறப்பு அலங்காரத்துடன் திருக்கல்யாண மேடையில் எழுந்தருள செய்யப்பட்டது. இரவு 9 மணி அளவில் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலமான தேசிய பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கார்த்தியாயினி அம்பாளுக்கு மாப்பிள்ளை சுவாமி (கல்யாண சுந்தரேஸ்வரர்) திருமாங்கல்யம் அணிவித்தார். தொடர்ந்து இத்தலத்தில் இறைவன் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர்க்கு படிக்காசு வழங்கியதன் நினைவாக விழாவில் திருவாவடுதுறை ஆதீனம் ஓதுவார்களுக்கு பொற்க்கிழி (படிக்காசு) மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கினார். விழாவில் திருவாவடுதுறை ஆதீன மணியக்கார் சண்முகம், தலைமை மேலாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர் விழா ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் செய்திருந்தார்.






