சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நெல்
உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்யப்படும் பொருள், நம்மை சுற்றி ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
திருப்பூர் மாவட்டம் சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில், ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. இந்த பெட்டியில் பக்தர்களின் கனவில் உணரப்படும் பொருளை வைத்து பூஜை செய்வது வழக்கமாக உள்ளது.
பக்தர்கள் கனவில் வரும் இந்த பொருள் கோவிலில் உள்ள உத்தரவு பெட்டிக்குள் வைக்கப்படும். அடுத்த பொருள் பக்தர்கள் கனவில் வரும் வரை, முந்தைய பொருள் இப்பெட்டிக்குள் இருக்கும். இவ்வாறு பூஜை செய்யப்படும் பொருள், நம்மை சுற்றி ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் அல்லது நடப்பதை முன்கூட்டி கணிப்பதாக இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நிறைபடி நெல் வைத்து பூஜை செய்யப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டு அமாவாசை தினமான இன்று ஆண்டவன் உத்தரவு பெட்டிக்குள் நிறைபடி நெல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு நெல் தொடர்பான தாக்கம் ஏற்படலாம் என்று பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.