சூரிய பகவானுக்கு சிறப்பு பூஜை


Surya Bhagavan
x

திருநகர் கோவிலில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று சுமார் 30 நிமிடம் சூரியபகவானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெறும்.

திருப்பரங்குன்றம்:

திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகர் மகாலட்சுமி நெசவாளர் காலனியில் ஸ்ரீவரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சூரிய பகவானுக்கு என்று தனி சன்னதி அமைந்து உள்ளது. இங்கு, ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.30 மணி முதல் 11 மணி வரை சுமார் 30 நிமிடம் சூரியபகவானுக்கு அபிஷேக ஆராதனை நடந்து வருகிறது.

அதன்படி ஞாயிற்றுக்கிழமையான நேற்று சூரிய பகவானுக்கு சிறப்பு அபிஷேகமும், விசேஷ அலங்காரமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சூரிய பகவானை வழிபட்டனர்.


Next Story