சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு

திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
மயிலாடுதுறை
பொறையாறு அருகே திருவிடைக்கழி கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இ்ந்த கோவிலுக்கு ஆடி மற்றும் தை, பங்குனி மாதங்களில் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருவது வழக்கம்.
அந்தவகையில் ஆடிகிருத்திகையையொட்டி சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடந்தன.இதனையொட்டி கும்பகோணம் சுவாமிமலையில் உள்ள முருகன் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் மற்றும் பல்வேறு காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக கோவிலை வந்தடைந்தனர்.
சிறப்பு அபிஷேகம்
அதனைத்தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் உற்சவ மூர்த்தியான வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி தலவிருட்ச மரத்தடியில் எழுந்தருள செய்யப்பட்டு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story






