தஞ்சை பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு


தஞ்சை பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி தஞ்சை பெருமாள் கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி தஞ்சை பெருமாள் கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ரத்ன அங்கி அலங்காரம்

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி தஞ்சை நாலுகால் மண்டபம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, ரத்ன அங்கி அலங்காரம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு ஸ்ரீதேவி, பூதேவியுடன் ரத்ன அங்கி அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாளை வழிபட்டனர்.பக்தர்களுக்கு துளசி, தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்பட்டது. நாலுகால் மண்டபத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு சந்தனக்காப்பு அலங்காரமும் செய்யப்பட்டது.இதேபோல் தஞ்சை கொண்டிராஜபாளையத்தில் உள்ள யோக நரசிம்ம பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் தேங்காய் உடைத்து, துளசிமாலை உள்ளிட்ட பொருட்களை வழங்கி வழிபாடு செய்தனர். தஞ்சை மானம்புச்சாவடி பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சந்தனக்காப்பு

தஞ்சை வடக்கு வீதியில் புகழ்பெற்ற ராஜ கோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சார்ந்த 88 திருக்கோவிலில் ஒன்றாகத் திகழ்கிறது. இங்கு சக்கரத்தாழ்வார் மூலஸ்தானத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். விஜயவல்லி மற்றும் சுதர்சன வல்லி சமேதராக சக்கரத்தாழ்வார் 16 கரங்களுடன் அபூர்வமான கோலத்தில் காட்சி தருகிறார்.இந்த கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று காலை 7.30 மணிக்கு சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனமும் பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடந்தது.மாலை 6 மணிக்குசக்கரத்தாழ்வாருக்கு சந்தனக்காப்பு அலங்காரமும், மாலை 6.30 மணிக்கு அஷ்ட புஜ சக்கரத்தாழ்வார் சிறப்பு மலர் அலங்காரத்தில் கோவில் உட்பிரகாரத்தில் சாமி புறப்பாடு நடந்தது.இதில் திரளான பக்ததர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story