விடுமுறையில் குழந்தைகளை இங்கு அழைத்து செல்லலாமே..! தமிழகத்தின் முக்கிய ஆன்மிக தலங்கள்
தஞ்சையை ஆண்ட சோழ மன்னர்களில் ஒருவரான ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதுதான் பெரிய கோவில்.
பரீட்சை முடிந்து விடுமுறை தொடங்கும் இந்த நேரத்தில் நம் குழந்தைகளுக்கு தமிழகத்தின் பாரம்பரிய கோவில்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வது உகந்ததாக இருக்கும். நம் பாரம்பரிய கலை, பொறியியல் வல்லமை, பாரம்பரியம், அழகுணர்ச்சி மற்றும் பக்தியை பிரதிபலிக்கும் இக்கோவில்களின் சிறப்புக்களை வளரும் தலைமுறையினர் தெரிந்துகொள்வது அவசியம்தானே. அப்படிப்பட்ட சில கோவில்களைப் பற்றி காணலாம்.
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில்
சுந்தரேஸ்வரர் மீனாட்சியுடன் மணக்கோலத்தில் கொலுவிருக்கும் மண்டபம் உலகப் புகழ்பெற்றதாக கட்டடக்கலையின் நுட்பத்தை காட்டுகிறது. குலசேகர மன்னன் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டது. பின்னர் வந்த நாயக்க மன்னர்கள் இதனை விரிவாக்கம் செய்து கட்டினார்கள். இக்கோவிலில் அமைந்துள்ள 12 கோபுரங்களும் தமிழகத்தின் அடையாளமாக 160 அடி உயரத்தில் இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் உள்ளது. இங்குள்ள பொற்றாமரைக் குளம், சிவன் எழுந்தருளி அருள் பாலித்த இடமாக கருதப்படுகிறது. இக்கோவிலில் நடைபெறும் சித்திரைத் திருவிழா புகழ் பெற்றது.
ஏகாம்பரீஸ்வர் திருக்கோவில்
தென் இந்தியாவில் உள்ள உயரமான கோபுரங்களில் ஒன்றாக இக்கோவிலின் கோபுரம் 57 மீட்டர் உயரத்தில் கம்பீரமாக நிற்கிறது. 5 தாழ்வாரங்களில் 1000 கால் மண்டபமும் எழுப்பப்பட்டுள்ளது. இங்கு உள்ள பிருதிள லிங்கமானது தென்னிந்தியாவின் பஞ்சபூத தலங்களில் ஒன்றாக அமைந்திருக்கிறது. இங்குள்ள காசிநாதா கோவில் பல்லவ மன்னனான ராஜசிம்மனால் கட்டப்பட்டது. இங்குள்ள சிற்பங்கள் கலை நுட்பத்திற்காக புகழ்பெற்றவை, ஏகாம்பரீஸ்வர் கோவில் விஜய நகர அரசர்களால் கட்டப்பட்டது. இந்த கோபுரம் கட்டடக்கலையின் அற்புதமாகக் கருதப்படுகிறது.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவில்
தென் இந்தியாவின் முக்கியமான புனித தலங்களுள் ஒன்றாக ராமேஸ்வரம் கருதப்படுகிறது. இங்கே 12 ஜோதிலிங்கங்கள் உள்ளன. இந்த திருக்கோவிலுக்கும் சென்று இங்குள்ள 22 தீர்த்தங்கள் நீராடி வந்தால் காசியில் கிடைக்கும் அதே முக்தி இங்கே கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் இங்கு பக்தர்கள் புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர். இக்கோவிலில் அமைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய கம்பீரக்கோபுரமும், கோவிலில் அமைந்துள்ள மூன்றாவது பிரகாரம் 1200 மீட்டர் நீளம் கொண்ட பிரகாரமும் கட்டடக்கலையில் புகழப்படும் சிறப்புகளாகும். இந்தப்பிரகாரம் உலகிலேயே மிக நீண்ட தொடு பிரகாரமாகும். இங்கே சிவராத்திரி, நவராத்திரி, கந்தசஸ்டி, ஆருத்தர்கள் ஆகியவை சிறப்பான ஒன்று.
சிதம்பரம்
தென்னாடு கொண்ட சிவனின் ஐந்து சபைகளுள் ஒன்றான பொற்சபை இதுதான். சிவனின் திருத்தாண்டவத்தின் பொருளையும், நாட்டியத்தின் மீதான அவரது கலை நயத்தையும் எடுத்துக்காட்டும் விதமாக உள்ளது சிதம்பரம் திருக்கோவில். இங்குள்ள சிதம்பரம் நடராலும் நாட்டியக் கலையின் கடவுளாகக் கருதப்படுகிறார். இயல், இசை, நாட்டியத்தில் நாட்டியத்திற்கான கலை நயத்தை பறைசாற்றும் விதத்தில் நாட்டியச் சிற்பங்களோடு கோவில் விளங்குகிறது. ஆலையத்தின் மேற்கூரை பொன்னால் வேயப்பட்டது.
தஞ்சைப் பெரியகோவில்
தஞ்சையை ஆண்ட சோழ மன்னர்களில் ஒருவரான ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதுதான் இந்தப் பெரிய கோவில், இந்தியச் சிற்பக்கலைக்கு ஆதார சுருதியாகத் திகழ்வது இந்த கட்டுமானக் கலைதான். ஆழிகள் சுமந்த நடுவில் இக்கோவில் தஞ்சை மாநகரில் கம்பீரமாக எழுந்து நிற்கிறது. பிரகதீஸ்வர் கோவில் கொண்டுள்ள ஆலயத்தின் கருவறையிலிருந்தே, இதன் விமானக் கோபுரம் 216 அடிகளில் எழுந்து நிற்பதே தனிச்சிறப்பான ஒன்றாகும். இதன் மேற்புற கலசம் வெண்கலத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோபுரத்தின் நிழல் கீழே விழாதது மற்றுமொரு சிறப்பாகும். கருவறைக்கு எதிரிலுள்ள நந்தியானது 19 அடி நீளமும் 8 அடி அகலமும் கொண்டு 12 அடியாய் உயர்ந்து நிற்பது வேறெங்கும் காணமுடியாத ஒன்று.