தும்பை மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா


தும்பை மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
x

குத்தாலம் அருகே தும்பை மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது

மயிலாடுதுறை

குத்தாலம்;

குத்தாலம் அருகே ஆனைமேலகரம் கிராமத்தில் சிறப்பு வாய்ந்த தும்பை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் 38-வது ஆண்டு தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி கணபதிஹோமம், காப்பு கட்டுதல், அம்மனுக்கு சந்தனகாப்பு, மஞ்சள் காப்பு, திருவிளக்கு பூஜை, அன்னதானம், கஞ்சி வார்த்தல், பால்குட காவடி திருவிழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடந்தது. முன்னதாக காவிரி ஆற்றங்கரையில் இருந்து கங்கணம் கட்டிக்கொண்ட பக்தர்கள் மேள வாத்தியங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் கரகம், அலகு காவடிகள் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை அடைந்தனர். பின்னர் கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் தீ மிதித்து விரதம் இருந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story