மயிலாடுதுறை பகுதி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


மயிலாடுதுறை பகுதி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 12 Aug 2023 12:45 AM IST (Updated: 12 Aug 2023 4:29 PM IST)
t-max-icont-min-icon

ஆடி கடைசி வெள்ளியையொட்டி மயிலாடுதுறை பகுதி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை;

ஆடி கடைசி வெள்ளியையொட்டி மயிலாடுதுறை பகுதி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முத்துமாாியம்மன் கோவில்

கொள்ளிடம் அருகே மாதானம் முத்து மாரியம்மன் கோவிலில் ஆடி கடைசி வௌ்ளியையொட்டி தீ மிதி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து 10 நாட்கள் அம்மன் வீதி உலா காட்சி மற்றும் சிறப்பு யாக பூஜைகள் நடந்தது. நேற்று மாலை முத்து மாரியம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா காட்சி நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் கோவில் எதிர்புறம் அமைந்துள்ள தீக்குண்டத்தின் எதிரே தீமிதி விழா நடைபெற்றது. விழாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தும் விதமாக தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்தனார். மேலும் பக்தர்கள் அலகு குத்தி, பால்காவடி, மற்றும் பாடை கட்டி, . தீச்சட்டி ஏந்தியும், உடல் உறுப்பு களை பொம்மைகளாக செய்து அம்மனுக்கு காணிக்கை செலுத்தி வழிபாடு நடத்தினார். இரவு அம்மன் வீதி உலா காட்சி நடைபெற்றது.

பிரசன்ன மாரியம்மன் கோவில்

மயிலாடுதுறை நகரில் பஸ் நிலையம் அருகே பிரசித்தி பெற்ற வண்டிக்காரத்தெரு பிரசன்ன மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் கடைசி வெள்ளியை முன்னிட்டு நகர பழவியாபாரிகள் சங்கத்தினர் பால்குடம் எடுத்து வழிபாடு நடத்துவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் ஆடி கடை வெள்ளியையொட்டி நேற்று பால்குட விழா நடந்தது. முன்னதாக காவிரி துலாக்கட்டத்தில் இருந்து ஏராளமான பழ வியாபாரிகள் பால்குடம் எடுத்து, பச்சைக்காளி, பவளக்காளி மற்றும் சிவதாண்டவ நடனத்துடன், மேள தாளங்கள் ஒலிக்க ஊர்வலமாக புறப்பட்டனர். பின்னர் பக்தர்கள் கொண்டுவந்த பாலைக்கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

திருமணஞ்சேரி

திருமணஞ்சேரி கீழத்தெருவில் கல்யாண மாரியம்மன் கோவில் பால்குடதிருவிழா நேற்று நடந்தது. முன்னதாக கங்கணம் கட்டிக்கொண்டு விரதம் இருந்த பக்தர்கள் திருமணஞ்சேரி வீரசோழன் ஆற்றங்கரையிலிருந்து சக்தி கரகம் முன் செல்ல பால்குடம் எடுத்த பக்தர்கள் வாணவேடிக்கைகள், மேள வாத்தியங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து சந்தன காப்பு அலங்காரமும், இரவு அம்பாள் வீதியுலா நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story