அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன்கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர்


ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன்கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

ஆடி மாதம்

தமிழ் மாதங்களில் ஆடி என்பது ஆன்மிக சிறப்பு மிகுந்த பக்தி மாதம். ஆடி மாதத்தில் ஆடிவெள்ளி, வரலட்சுமி விரதம், ஆடி அமாவாசை, ஆடி கிருத்திகை, ஆடிப்பெருக்கு, ஆடி பவுர்ணமி, ஆடிப்பூரம், ஆடித்தபசு என ஆடி மாதமே கோலாகலமாக இருக்கும். ஆடி மாதத்தை சக்தி மாதம் மற்றும் அம்மன் மாதம் என்று அழைப்பார்கள்.ஆடிமாதம் முழுவதுமே அம்மன்களுக்கு உகந்த மாதம் ஆகும். அதுவும் குறிப்பாக ஆடிமாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாளாகவும், ராகு காலத்தில் அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட்டால், நினைத்த காரியம் கைகூடும், மாங்கல்ய தோஷம் நீங்கும், திருமண தடைகள் விலகும், ஆயுள் விருத்தியாகும் என்பதால் பெண்கள் பல கோவில்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனுக்கு விளக்கேற்றி அம்பாளை தரிசனம் செய்வது வழக்கம்.

அம்மன்கோவில்களில் வழிபாடு

அதன்படி நேற்று ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி தஞ்சை மாவட்டத்தில் உள்ள அம்மன்கோவில்களில் சிறப்புவழிபாடு நடந்தது. தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற வேண்டி நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.தஞ்சை கீழவாசல் வடபத்திரகாளியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பக்தர்கள் பூமாலை, எலுமிச்சை மாலைகளை சாமிக்கு வழங்கி, அகல்விளக்குகள், எலுமிச்சை தோளில் எண்ணெய், நெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். அதேபோல் கோடியம்மன் கோவில், எல்லையம்மன் கோவில், பர்மாகாலனி அங்காளஈஸ்வரி அம்மன் கோவில், வல்லம் ஏகவுரி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. தஞ்சை புதுஆற்றங்கரை ஜி.ஏ.கெனால் ரோட்டில் உள்ள முனியாண்டவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story