பங்குனி உத்திர பந்தக்கால் நடும் விழா


பங்குனி உத்திர பந்தக்கால் நடும் விழா
x

திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர பந்தக்கால் நடும் விழா நடந்தது.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி;

திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு பங்குனி உத்திர பந்தக்கால் நடும் விழா நேற்று காலை நடைபெற்றது. பந்தக்கால் முகூர்த்தத்துக்கான சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தர்ப்பை, மாவிலை கட்டப்பட்டு பூக்களால் பந்தக்கால் அலங்கரிக்கப்பட்டு சந்தனம், குங்குமம் வைக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு பந்தக்காலை நட்டு வைத்தனா். நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் மெய்யழகன், கோவில் செயல் அலுவலர் சிவேந்திரராஜா, பேரூராட்சி செயல்அலுவலர் நெடுஞ்செழியன் மற்றும் பங்குனி உத்திர விழாக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். வருகிற 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோவிலின் முன்புறம் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது,ஏப்ரல் 4-ந் தேதி காலை கோவிலில் பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டு வீதி உலா நடைபெறும். திருக்காட்டுப்பள்ளி நகர வீதிகளின் வழியே பஞ்சமூர்த்திகள் உலா வந்து காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடக்கிறது. தொடர்ந்து காவிரி ஆற்றில் அமைக்கப்பட்ட அலங்கார பந்தலில் இருந்து இசை நிகழ்ச்சிகள் நடக்கிறது.Next Story