கோவில் தேரோட்டம்


கோவில் தேரோட்டம்
x

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது.

மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆயுள் விருத்திக்காக பல்வேறு சிறப்பு யாக பூஜைகள் நடைபெறுகின்றன. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரத்தையொட்டி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான ஆடிப்பூர திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதனைத்தொடர்ந்து தினமும் சாமி வீதி உலா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து நேற்று தேரோட்டம் நடந்தது. இதனையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகர், அபிராமி, சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் எழுந்தருளினர். இதனையடுத்து மேலவீதியில் இருந்து காலை 9 மணிக்கு தேர் புறப்பட்டது. இதில், உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். வடக்கு வீதி, கீழவீதி, தெற்கு வீதி வழியாக சென்ற நிலையை அடைந்தது. பாதுகாப்பு பணியில் பொறையாறு போலீசார் ஈடுபட்டனர்



Next Story