கோலாகலமாக தொடங்கிய வேளாங்கண்ணி கொடியேற்ற திருவிழா


வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வேளாங்கண்ணி:

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலய ஆண்டு திருவிழா இன்று(திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது

மாலை 5.45 மணிக்கு கொடியானது கடற்கரை சாலை, ஆரியநாட்டு தெரு வழியாக. ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் கொடியை தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்து கொடியேற்றி வைத்தார். அப்போது பேராலயத்தில் வண்ண மின்விளக்குகள் எரியவிடப்பட்டன.

அதனைதொடர்ந்து வாணவேடிக்கைகள் நடைபெற்றன. அப்போது பக்கதர்கள் பலூன்களை பறக்கவிட்டு மகிழ்ந்தனர். பின்னர் பேராலயா கலையரங்கில் ஆயர் தலைமையில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி வருகிற 7-ந்தேதி(புதன்கிழமை) நடக்கிறது.

திருவிழாவிற்கு நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் மேற்பார்வையில் 16 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 110 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 2 ஆயிரம் போலீசார்களும், இது தவிர 5 கம்பெனி தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், 200 ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பாக 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் அரசு போக்குவரத்து கழகம் மூலம் திருவிழா காலங்களில் தினமும் 250 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவின்படி திருவிழா நாட்களில் பக்தர்கள் கடலில் சென்று குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது .அதனால் கடற்கரை பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்படுகிறது .அங்கு பக்தர்கள் யாரும் குளிக்காமல் தடுப்பதற்காக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

1 More update

Next Story