வாரம் ஒரு திருமந்திரம்


வாரம் ஒரு திருமந்திரம்
x

திருமந்திர நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

திருமந்திரம் என்னும் திருப்பாடல்களால் சிவபெருமானை போற்றிப் பாடியவர் திருமூலர். அவர் இயற்றிய திருமந்திர நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

பாடல்:-

பேச்சற்ற இன்பத்துப் பேரானந்தத்திலே

மாச்சற்ற என்னைச் சிவமாக்கி மாள்வித்துக்

காச்சற்ற சோதி கடன்மூன்றும் கைக்கொண்டு

வாச்ச புகழ்மாளத் தாள்தந்து மன்னுமே.

விளக்கம்:-

பேசுவதற்கு வார்த்தைகளின்றி பேரானந்தத்தில் என்னை சிவபெருமான் ஆழ்த்திவிட்டார். என் குற்றங்களை எல்லாம் அகற்றி, என்னையும் சிவமாக மாற்றிவிட்டார். நெருப்பே உருவாக அமைந்த அவரது ஒளி என்னை சுடவில்லை. ஆனால் என் ஆன்மாவின் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று குற்றங்களையும் முற்றிலுமாக அது அழித்து விட்டது. சிவபெருமான் அவரது திரு வடிகளை என் மீது வைத்து, என்னில் நிலைபெற்று விட்டார்.


Next Story