அம்மன் சிலை கண் திறந்ததாக பரபரப்பு


அம்மன் சிலை கண் திறந்ததாக பரபரப்பு
x

அம்மன் சிலை கண் திறந்ததாக பரபரப்பு

கோயம்புத்தூர்

சுல்தான்பேட்டை

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியம் செலக்கரிச்சல் ஊராட்சிக்கு உட்பட்டது, திம்மநாயக்கன்பாளையம் கிராமம். இங்கு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த 15-ந் தேதி வழக்கம்போல் பூசாரி கோவிலை திறந்து பூஜைக்கு தயாரானார்.

அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி, கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். பின்னர் அம்மன் சிலையை பூசாரி தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அம்மனின் வலது கண் திறந்து இருப்பதாக சிறுமி கூறினாள். மேலும் பூசாரியும் அதை கண்டார். உடனே அம்மனுக்கு சிறப்பு அலங்கார, அபிஷேக பூஜை நடத்தப்பட்டது. இது பற்றி அக்கம்பக்கத்தினருக்கு தகவல் பரவியது. இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனால் கோவிலுக்கு வந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, கடந்த 3 நாட்களாக அம்மன் கண் திறந்து இருக்கிறது. அதில் இருந்து நீர் வடிகிறது. இது ஆச்சரியமாக உள்ளது என்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story