வாரம் ஒரு திருமந்திரம்


வாரம் ஒரு திருமந்திரம்
x

திருமூலர் இயற்றிய திருமந்திர நூல், பல அறிவார்ந்த விஷயங்களை, ஆன்மிகத்தோடு இணைத்து நமக்கு போதிக்கிறது.

சிறப்புமிக்க அந்த நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

பாடல்:-

மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தில் மறைந்தது மாமத யானை

பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்

பரத்தில் மறைந்தது பார்முதல் பூதமே.

விளக்கம்:-

மரத்தில் உருவாக்கப்பட்ட ஒரு யானைச் சிற்பம், நம் சிந்தனைக்கேற்றவாறு மாறுபடும். எத்தகைய சிறப்பான மரத்தில் செய்யப்பட்ட சிற்பம் என்று நினைக்கும்போது, அங்கே யானையின் உருவம் மறைந்து, மரத்தின் உருவமே நம் நினைவில் ஓங்கி நிற்கும். அதுவே யானையை ரசிக்கும்போது, மரம் அங்கே நம் நினைவுக்கு வருவதில்லை.

அதுபோலத்தான் இந்த உலகத்தையும், அதில் தோய்ந்து கிடக்கும் இன்பங்களையும் நினைக்கையில் இறைசிந்தனை நமக்கு வருவது இல்லை.

அதுவே இறைசிந்தனையோடு இருக்கையில், உலக இன்பங்கள் பற்றிய எண்ணம் நமக்குத் தோன்றாது.


Next Story