வாரம் ஒரு திருமந்திரம்


வாரம் ஒரு திருமந்திரம்
x

திருமூலர் பாடிய திருமந்திரம், சிவபெருமானை போற்றும் சைவத்தை மட்டுமில்லாது, வாழ்க்கைக்கு தேவையான பாடத்தையும் கற்றுத் தருகிறது.

திருமூலரால் பாடப்பட்ட திருமந்திரம், சைவ நெறிக்கு ஒப்பாக வைத்துப் போற்றப்படும் ஒரு நூல். மூவாயிரம் பாடல்களைக் கொண்ட இந்த நூலில், எண்ணிலடங்கா இன்பங்கள் நிறைந்துள்ளன. இதில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

பாடல்:-

சாண் ஆகத்துள்ளே அழுந்திய மாணிக்கம்

காணும் அளவும் கருத்தறிவார் இல்லை

பேணிப் பெருக்கிப் பெருக்கி நினைவோர்க்கு

மாணிக்க மாலை மனம்புகுந் தானே.

விளக்கம்:-

மனித உடலுக்குள் மூலம், கொப்புள், வயிறு, நெஞ்சு, கழுத்து, புருவ மத்தி என்று ஆறு நிலைகளின் இடை இடையே நிலவும் ஒரு சாண் வெளியில் இறைவன் மாணிக்கம் போல் பதிந்துள்ளான். அந்தப் பெருமானை மெய்யுணர்வால் விளங்கிக் கொள்பவர்களுக்கு, அவன் உள்ளம் புகுந்து அருள்புரிவான்.


Next Story