தெப்பத்தில் எழுந்தருளி அருள்பாலித்த பத்மாவதி தாயார்


Tiruchanoor Padmavati temple Teppotsavam
x

பத்மசரோவர் திருக்குளத்தில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளிய தாயாரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருப்பதி:

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர தெப்ப உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. அலங்கரிக்கப்பட்ட பத்மசரோவர் திருக்குளத்தில் அமைக்கப்பட்ட தெப்பத்தில் உற்சவர்கள் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

விழாவின் முதல் நாளில் ருக்மணி, சத்யபாமா சமேத ஸ்ரீகிருஷ்ணர், இரண்டாம் நாளில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜசாமி தெப்பத்தில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மூன்றாம் நாளில் பத்மாவதி தாயார் எழுந்தருளி குளத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தாயாரை தரிசனம் செய்தனர்.

தெப்ப உற்சவத்தையொட்டி ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

1 More update

Next Story