இன்றைய ராசிபலன்


இன்றைய ராசிபலன்
x
தினத்தந்தி 3 May 2024 1:14 AM GMT (Updated: 4 May 2024 2:08 AM GMT)

கடக ராசி பெண்களுக்கு அக்கம் பக்கத்தாரின் உதவி கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது நல்லது.

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி வருடம் சித்திரை மாதம் 20-ம் தேதி வெள்ளிக்கிழமை

நட்சத்திரம்: இன்று இரவு 9.26 வரை சதயம் பின்பு பூரட்டாதி

திதி: இன்று இரவு 8.36 வரை தசமி பின்பு ஏகாதசி

யோகம்:சித்த யோகம்

நல்ல நேரம் காலை: 9.30 - 10.30

நல்ல நேரம் மாலை: 4.30 - 5.30

ராகு காலம் மாலை: 12.00 - 1.30

எமகண்டம் காலை: 7.30 - 9.00

குளிகை காலை: 10.30 - 12.00

கௌரி நல்ல நேரம் காலை: 12.30 - 1.30

கௌரி நல்ல நேரம் மாலை: 6.30 - 7.30

சூலம்: மேற்கு

சந்திராஷ்டமம்: திருவாதிரை, புனர்பூசம்

ராசிபலன்

மேஷம்

வியாபாரத்தில் ஆதாயம் காணலாம். வாடிக்கையாளர்களிடம் ஆவேசமாக பேச வேண்டாம். வேலை தேடுபவர்கள் நேர்முக தேர்வில் வெற்றிப் பெறுவர். பெண் அரசியல்வாதிகளுக்கு புகழ், கௌரவம் உயரும். வெளியூர் பயணம் நேரிடும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

ரிஷபம்

குடும்பத் தலைவிகள் வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை வாங்குவர். அரசு டென்டர் போன்றவைகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவர். கலைஞர்களுக்கு வரவேண்டிய மீதித் தொகை வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மிதுனம்

தம்பதிகளிடையே அன்பு பெருகும். புதிய ஏஜென்சி எடுப்பீர்கள். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு கூடுதல் அலைச்சல் உண்டு. விவசாயிகளின் பொருட்களுக்கு விலை ஏற்றம் உண்டு. பயணங்களின் போது செல்போன் பேச வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

கடகம்

வீட்டில் மகிழ்ச்சி நிலவும். பெண்களுக்கு அக்கம் பக்கத்தாரின் உதவி கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது நல்லது. தொழிலதிபர்களுக்கு வேலையாட்கள் தங்கள் சொல்படி நடப்பர். தங்கள் பிள்ளை அயல்நாடு செல்வார்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

சிம்மம்

நட்பு வட்டம் விரிவடையும். உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். கணவனிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. உடல் நலம் தேறும். பிள்ளைகள் தங்கள் சொல்படி நடப்பர். பெண்கள் கணவர் வீட்டாரிடம் இணக்கமாக செல்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

கன்னி

இரவில் நீண்ட தூர பயணத்தை தவிர்க்கவும். தொழிலதிபர்களிடமிருந்து வேலையாட்கள் தொழில் யுக்திகளை கற்றுக் கொள்வார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள்.

வேலையில் தங்கள் கணவரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

துலாம்

உத்யோகஸ்தர்களை சக ஊழியர்கள் பாராட்டுவர். வியாபாரிகளுக்கு தங்கள் தொழிலுக்கு ஏற்ப வங்கிக் கடன் கிட்டும். வேலை தேடுபவர்களுக்கு புது உத்யோக வாய்ப்பு வரும். மளிகைக் கடை மற்றும் சில்லரை வியாபாரம் லாபம் தரும். மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். தம்பதிகளிடையே அன்பு பலப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

விருச்சிகம்

வியாபாரிகளுக்கு வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். தம்பதிகளிடம் ஒற்றுமை கூடும். சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். மாணவர்களின் நினைவாற்றல் கூடும். உத்யோகஸ்தர்கள் மேலிடத்தின் மேல் கவனம் கொள்வது நல்லது. தேக ஆரோக்கியம் சிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

தனுசு

நண்பர்கள் பக்கபலமாக இருப்பர். உத்யோகஸ்தர்கள் வேலையை விரைவில் முடிப்பர். கணவன்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரும். பொறுமை மிக அவசியம். பிரபலமானவர்களால் நன்மை உண்டு. உங்களை சார்ந்து இருப்பவர்களின் நிலையினை உணர்ந்து உதவுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மகரம்

தொழில் சூடு பிடிக்கும். வீட்டில் தயாரிக்கும் பொருட்கள் நல்ல விற்பனைக்கு உள்ளாகும். பங்கு சந்தையில் சில மாற்றங்கள் செய்வீர்கள். பயணத்தின் போது எச்சரிக்கை தேவை.பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வேறு பள்ளியில் இடமாற்றத்திற்கு முயற்சி செய்வர்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கும்பம்

வெளிநாட்டு நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி மாற்றப்படுவார். பொதுபணிகளில் உள்ளவர்கள் ஆதாரமில்லாமல் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம். மாணவர்கள் படிப்பிற்காக இணையதளத்தை அதிகம் பயன்படுத்துவர்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

மீனம்

வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் ஆத்திரப்படாதீர்கள். பொறுமையை கையாள்வது நன்மையைத் தரும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும். தம்பதிகளிடையே அன்யோன்யம் மிகும். மாணவர்கள் நன்கு படிப்பர்.தேகம் பொலிவு பெறும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை


Next Story