இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x

படம் : திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர்

இன்று சஷ்டி விரதம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர், மதுரை ஸ்ரீ கூடலழகர் கோவில்களில் பகற்பத்து உற்சவ சேவை.

இன்றைய பஞ்சாங்கம் :

சோபகிருது ஆண்டு, மார்கழி-2 (திங்கட்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: சஷ்டி இரவு 6.36 மணி வரை பிறகு சப்தமி

நட்சத்திரம்: அவிட்டம் காலை 6.26 மணி வரை பிறகு சதயம் நாளை விடியற்காலை 4.47 மணி வரை பிறகு பூரட்டாதி

யோகம்: சித்த, மரணயோகம்

ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம்: கிழக்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

இன்றைய முக்கிய நிகழ்வுகள்:

இன்று சஷ்டி விரதம். ஆழ்வார்திருநகரி ஸ்ரீநம்பெருமாள் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் பரமபதநாதன் திருக்கோலமாய் காட்சி. சிதம்பரம், திருநெல்வேலி, திருக்குற்றாலம் கோவில்களில் சிவபெருமான் உற்சவம் ஆரம்பம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர், மதுரை ஸ்ரீ கூடலழகர் கோவில்களில் பகற்பத்து உற்சவ சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப்பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் சுவாமிக்கு காலை சிறப்பு சோமவார அபிஷேகம் அலங்காரம்.

இன்றைய ராசிபலன் :

மேஷம் : வருமானம் திருப்தி தரும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்களால் நன்மை உண்டு. வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

ரிஷபம் : பணவரவு திருப்தி தரும் நாள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வரலாம்.

மிதுனம்: சேமிப்பு அதிகரிக்கும் நாள். தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். வெளியுலக தொடர்புகள் விரிவடையும், விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். ஆபரணங்களை வாங்குவதில் ஆர்வம் ஏற்படும்.

கடகம் : மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். அருகிலுள்ளவர்களின் ஆதரவு குறையலாம். சில பிரச்சினைகளுக்கு முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். பயணங்களில் கவனம் தேவை. வரவை காட்டிலும் செலவு கூடும்.

சிம்மம் : மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். வருமானம் திருப்தி தரும். தொல்லை கொடுத்தவர்கள் தோள் கொடுத்து உதவுவர். தடைப்பட்ட காரியங்கள் துரிதமாக நடைபெறும். சொத்துகளால் லாபம் உண்டு. செல்வாக்கு உயரும் நாள்.

கன்னி : வரன்கள் வாயில் தேடி வரும் நாள். வருமானம் திருப்தி தரும். தொழில் முன்னேற்றம் கருதி பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். எதிரிகள் விலகுவர். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.

துலாம் : எதிரிகள் உதிரியாகும் நாள். இல்லம் தேடி நல்ல செய்தி ஒன்று வந்து சேரும். கடன் சுமை குறையும். சென்ற வாரத்தில் நடைபெற வேண்டிய காரியம் இன்று நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.

விருச்சிகம் : வெற்றி கிடைக்க விநாயகரை வழிபட வேண்டிய நாள். பிரபலஸ்தர்கள் உங்களுக்கு பின்னணியாக இருப்பர். வருமானம் உயரும். வளர்ச்சிப்பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள்.

தனுசு : வளர்ச்சி கூடும் நாள். வருங்கால நலன் கருதி சேமிக்க முற்படுவீர்கள். விடியும் பொழுதே வியக்கும் தகவல் வந்து சேரும். கல்யாணக் கனவுகள் நனவாகும். புதிய பொறுப்புகளும், பதவிகளும் உண்டு.

மகரம் : நினைத்தது நிறைவேறும் நாள். இடம், பூமி வாங்கும் எண்ணம் நிறைவேறும். புது முயற்சிகளுக்கு மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தினர்களை அனுசரித்து செல்வது நல்லது.

கும்பம் : தொட்ட காரியங்கள் வெற்றி பெறும் நாள். தொகை எதிர்பார்த்த படி வந்து சேரும். வியாபார விருத்தி உண்டு. ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும். சகோதரர்கள் சரியான நேரத்தில் கைகொடுத்து உதவுவர்.

மீனம் : யோகமான நாள். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சி காண்பீர்கள். மதிப்பும், மரியாதையும் உயரும். நிகழ்காலத் தேவைகளை பூர்த்தி செய்ய நண்பர்கள் முன்வருவர்.

சந்திராஷ்டமம்: கடகம்.


Next Story