இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
சிதம்பரம் சிவபெருமான் தங்க சூரிய பிரபையில் பவனி.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மார்கழி-4 (புதன்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: அஷ்டமி நண்பகல் 1.59 மணி வரை பிறகு நவமி
நட்சத்திரம்: உத்திரட்டாதி நள்ளிரவு 1.39 மணி வரை பிறகு ரேவதி
யோகம்: சித்த, மரணயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்றைய முக்கிய நிகழ்வுகள்
திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். சிதம்பரம் சிவபெருமான் தங்க சூரிய பிரபையில் பவனி. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் திரிபுர சம்கார லீலை. ஆழ்வார்திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி தலங்களில் பகற்பத்து உற்சவ சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமி சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை. சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்
அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. நண்பர்களின் அன்புத்தொல்லைக்கு ஆளாக நேரிடும். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
ரிஷபம்
வெளிவட்டார பழக்கவழக்கம் விரிவடையும் நாள். பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கூடப்பிறந்தவர்களால் நன்மை உண்டு. பயணம் பலன் தரும் விதம் அமையும்.
மிதுனம்
மதியத்திற்குமேல் மனக்குழப்பம் அகலும் நாள். நேற்றைய பிரச்சினைகள் இன்று தீரும். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். சகோதரர் வழியில் இனிய செய்தி கிடைக்கும்.
கடகம்
யோகங்கள் வந்து சேர யோசித்து செயல்பட வேண்டிய நாள். வாழ்க்கை தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். வீண் விரயங்கள் உண்டு. உறவு பகையாகலாம். திடீர் இடமாற்றம் திகைப்பை உருவாக்கும்.
சிம்மம்
நண்பர்கள் நாடி வந்து உதவும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு. உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
கன்னி
மகிழ்ச்சி கூடும் நாள். மனதளவில் நினைத்த காரியம் ஒன்றை செய்து முடிப்பீர்கள். நூதன பொருள் சேர்க்கை உண்டு. முன்னோர் வழி சொத்துகளில் இருந்த சிக்கல்கள் அகலும்.
துலாம்
முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
விருச்சகம்
போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வருமானம் திருப்தி தரும்.
தனுசு
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும். சம்பள உயர்வு பற்றிய தகவல் கிடைக்கும்.
மகரம்
சான்றோர்களை சந்தித்து மகிழும் நாள். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்கள் தக்க விதத்தில் உதவுவர். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகள் ஏற்கப்படும்.
கும்பம்
நட்பால் நன்மை கிடைக்கும் நாள். இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். நீண்ட நாளைய பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மீனம்
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். வீட்டு தேவைகளை மாற்று இனத்தவர்களின் உதவியுடன் பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்தபடியே இலாகா மாற்றம் கிடைக்கலாம்.