இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x

சூரியனார் கோவில் ஸ்ரீசூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, மார்கழி-8 (ஞாயிற்றுக்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: துவாதசி காலை 7.13 மணி வரை பிறகு திரயோதசி நாளை விடியற்காலை 5.25 மணி வரை பிறகு சதுர்த்தசி

நட்சத்திரம்: கார்த்திகை இரவு 10.14 மணி வரை பிறகு ரோகிணி

யோகம்: சித்த, அமிர்தயோகம்

ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

சூலம்: மேற்கு

இன்றைய முக்கிய நிகழ்வுகள்

இன்று கார்த்திகை விரதம். பிரதோஷம். சூரியனார் கோவில் ஸ்ரீசூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். குடந்தை ஸ்ரீசாரங்கபாணி, திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவில்களில் திருவாய் மொழி உற்சவம். திருப்பதி நவநிதி மகாதீர்த்தம். நாச்சியார்கோவில் ஸ்ரீஎம்பெருமான் தெப்ப உற்சவம். சென்னை கந்தகோட்டம் முருகப்பெருமான் சிறப்பு அபிஷேகம்.திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை சுவாமி-அம்பாள் விருஷபாரூடராய் காட்சியருளல்.

இன்றைய ராசிபலன்

மேஷம்

தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும் நாள். தொலைபேசி வழியில் கேட்கும் செய்திகளால் உற்சாகமடைவீர்கள். சகோதர சச்சரவுகள் அகலும். வீட்டை சீரமைப்பதில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.

ரிஷபம்

நாவன்மையால் நல்ல பெயர் எடுக்கும் நாள். வெளியூர் பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறை வேறலாம். பணவரவு திருப்தியாக இருக்கும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

மிதுனம்

சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற இயலுமா என்பது சந்தேகம் தான். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் பிரச்சினை உண்டு.

கடகம்

முட்டுக்கட்டைகள் அகன்று முன்னேற்றம் கூடும் நாள் தொழிலில் இருந்த இடையூறுகள் அகலும். புதியவர்களின் நட்பால் பொருளாதார நிலை உயரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டு.

சிம்மம்

முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள். சந்தோஷமான அனுபவங்கள் மூலம் மனதில் உற்சாகமும், தெம்பும் கூடும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

கன்னி

சிறப்புகள் வந்து சேர சிவாலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். பயணங்கள் செல்ல திட்டமிட்டு பின்னர் அதை மாற்றம் செய்வீர்கள். உங்கள் சொற்களுக்கு உறவினர்கள் மத்தியில் மதிப்பு உண்டாகும்.

துலாம்

இறை வழிபாட்டால் இனிமை காணவேண்டிய நாள். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. வரவைக் காட்டிலும் செலவு கூடும். குடும்பத்தினர்கள் உங்கள் மீது குறை சுமத்துவர்.

விருச்சிகம்

நன்மைகள் வந்து வந்து சேர நந்தியை வழிபட வேண்டிய நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். எதிர்கால முன்னேறத்திற்காக புதிய எதிர்கால முன்னேறத்திற்காக புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். தொழில் வெற்றி நடைபோடும்.

தனுசு

மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். அதிக செலவில் முடிக்க நினைத்த வேலையொன்றை குறைந்த செலவில் முடிப்பீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு.

மகரம்

ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் உள்ள மறைமுக போட்டிகளை முறியடிப்பீர்கள். சொந்த பந்தங்களுடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் அகலும்.

கும்பம்

கோவில் வழிபாட்டால் குதூகலம் காணவேண்டிய நாள். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் தற்காலிகப்பணி நிரந்தரப் பணியாக மாறும்.

மீனம்

காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். உறவினர்கள் வழியில் ஆதரவு உண்டு. வாகன பழுதுகளை சீர்செய்வீர்கள். தொழில் ரீதியாக வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும்.


Next Story