இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x
தினத்தந்தி 12 Feb 2024 6:53 AM IST (Updated: 12 Feb 2024 6:55 AM IST)
t-max-icont-min-icon

கன்னி ராசிக்காரர்களுக்கு புகழ் கூடும் நாள். புதிய பாதை புலப்படும். கடித போக்குவரத்து கனிந்த தகவலைத்தரும்.

இன்றைய பஞ்சாங்கம்:

சோபகிருது வருடம் தை மாதம் 29-ந் தேதி திங்கட்கிழமை.

திதி: திருதியை திதி இரவு (10.11)க்கு மேல் சதுர்த்தி திதி.

நட்சத்திரம்: பூரட்டாதி நட்சத்திரம் இரவு (7.02) க்கு மேல் உத்திரட்டாதி நட்சத்திரம்.

யோகம்: மரணயோகம் இரவு (7.02)க்கு மேல் சித்தயோகம். கீழ்நோக்குநாள்.

சூலம்: கிழக்கு

ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை

எமகண்டம்: மதியம் 10.30 மணி முதல் 12.00 மணி வரை

நல்ல நேரம்: காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை மற்றும் மதியம் 4.30 மணி முதல் 5.30 மணி வரை

இன்றைய ராசிபலன்:

மேஷம்: அலைச்சல் கூடும் நாள். அவசரத்தை தவிர்ப்பது நல்லது. தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு குறையலாம். பயணங்களால் தொல்லை உண்டு. குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும்.

ரிஷபம்: முன்னேற்றம் கூடும் நாள். முக்கிய புள்ளிகளின் சந்திப்பால் தொழில் வளர்ச்சி உண்டு, தொல்லை தந்தவர்கள் விலகுவர். கொடுத்த பாக்கிகள் வசூலாகும். வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மிதுனம்: மாற்று கருத்துடையோர் மனம் மாறும் நாள். அடிப்படை வசதிகளை பெருக்கிக்கொள்வீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு. தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

கடகம்: சேமிப்பு கரையும் நாள். திடீர் விரயங்களால் மனக்கலக்கம் ஏற்படும். அலுவலகத்தில் சக பணியாளர்களால் வீண்பழிகள் வரலாம். பிறருக்கு பொறுப்பு சொல்வதால் பிரச்சினை தேடி வரும்.

சிம்மம்: மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். பணிச்சுமையால் பதற்றம் அதிகரிக்கும். மற்றவர்களை முழுமையாக நம்ப வேண்டாம். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் தொல்லையுண்டு.

கன்னி: புகழ் கூடும் நாள். புதிய பாதை புலப்படும். கடித போக்குவரத்து கனிந்த தகவலைத்தரும். புண்ணிய காரியங்களுக்காக செலவிடுவீர்கள். உத்தியோக உயர்வு பற்றிய தகவல் வரலாம்.

துலாம்: வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். வருமானம் திருப்தி தரும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

விருச்சிகம்: வியக்கும் செய்தி வீடு வந்து சேரும் நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். தொழில் வெற்றி நடைபோடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கைகளை ஏற்பர்.

தனுசு: இடமாற்ற சிந்தனை மேலோங்கும் நாள். ரொக்கத்தால் வந்த சிக்கல்கள் அகலும். எதிரிகள் விலகுவர். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணையும் வாய்ப்பு உண்டு. பாகப்பிரிவினைகள் சுமுகமாகும்.

மகரம்: தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும் நாள். திடீர் வரவு உண்டு. தொலைதூர பயணம் செய்ய எடுத்த முயற்சி கைகூடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள்.

கும்பம்: நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். இடமாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். ஆன்மிக பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

மீனம்: மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். குடும்பச்செலவு கூடுகின்றதே என்று கவலைப்படுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. உத்தியோகத்தில் சுதந்திரமாக செயல்பட இயலாது.

சந்திராஷ்டமம்: பகல் 1.25 வரை கடகம்; பிறகு சிம்மம்.


Next Story