இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x

மகிழ்ச்சி பெருக மால்மருகனை வழிபட வேண்டிய நாள்.

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, மாசி 12 (சனிக்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: பவுர்ணமி இரவு 6.18 மணிக்கு மேல் பிறகு பிரதமை

நட்சத்திரம்: மகம் இரவு 10.33 மணிக்கு மேல் பூரம்

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம்: மதியம் 1.30 மணி முதல் 3.00 மணி வரை

சூலம்: கிழக்கு

நல்ல நேரம்: காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

முக்கிய நிகழ்வுகள்

மகிழ்ச்சி பெருக மால்மருகனை வழிபட வேண்டிய நாள். கும்பகோணம் சக்கரபாணி, காரமடை அரங்கநாதர் தலங்களில் தேரோட்டம். திருச்செந்தூர் முருகப் பெருமான் தெப்பம். கோவை கோணியம்மன் பவனி.

ராசிபலன்

மேஷம்

ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். தொழில் முயற்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். நண்பர்கள் உதவியுடன் நல்ல காரியம் ஒன்றை செய்து முடிப்பீர்கள்.

ரிஷபம்

சொல்லை செயலாக்கிக் காட்டும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். முன்னேற்றத்திற்கு உதவிய சிலரை மறக்காமல் நன்றி செலுத்துவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கலாம்.

மிதுனம்

நினைத்தது நிறைவேறி நிம்மதி காணும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். ஒளிமயமான எதிர்காலத்திற்கு உரிய திட்டங்களை தீட்டுவீர்கள், உத்தியோகத்தில் மேலிடத்திற்கு நெருக்கமாவீர்கள்.

கடகம்

வளர்ச்சி கூட வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டிய நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும், உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.

சிம்மம்

கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும் நாள். கடன் சுமை குறை யும். உங்களின் மணியான யோசனை களுக்கு பாராட்டுகளை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரி களின் மனதில் இடம்பெறுவீர்கள்.

கன்னி

நன்மைகள் நடைபெறும் நாள். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். எதிர்பார்த்த லாபம் தொழிலில் கிடைக்கும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். வீட்டுப் பரா மரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள்.

துலாம்

திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்ட படியே நடைபெறும் நாள். திறமைகள் வெளிப்படும். உடல்நலத்தில் அக்கறை தேவை. பணியாளர்கள் தொல்லை அக |லும். குடும்பத்தில் வருமானம் உயர நண்பர்கள் புது வழிகூறுவர்.

விருச்சிகம்

தெய்வ வழிபாட்டால் திருப்தி ஏற்படும் நாள். புகழ் கூடும். இல்லம் தேடி நல்ல செய்தியொன்று வந்து சேரும். பம்பரமாக சுழன்று பணிபுரிவீர்கள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். பணவரவு திருப்தி தரும்.

தனுசு

இட மாற்றங்களுக்கான அறிகுறி கள் ஏற்படும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் வளர்ச்சிக்கு தொலைபேசி வழித்தக வல் உறுதுணை புரியும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

மகரம்

யோசித்து செயல்பட வேண்டிய நாள். கையாளும் பொருட்களில் கவனம் தேவை. ஒரு வேலையை முடிக்க ஒன்றுக்கு இரண்டுமுறை அலைய நேரிடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடிக்கு ஆளாக நேரிடும்.

கும்பம்

அன்பால் எதையும் சாதித்துக் காட்டும் நாள். இழுபறியான காரியங்கள் இனிதே நடைபெறும். மனக்குழப்பம் அகலும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மீனம்

தன்னம்பிக்கையுடன் செயல்படும் நாள். பழைய பாக்கிகளை நாசூக்காகப்பேசி வசூலிப்பீர்கள், வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள்.


Next Story