இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
சிம்ம ராசிக்காரர்களுக்கு அலைபேசி வழித்தகவல் ஆனந்தம் தரும் நாள்.
இன்றைய பஞ்சாங்கம்:
சோபகிருது வருடம் மாசி மாதம் 13-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை.
திதி: பிரதமை திதி இரவு (8.23)க்கு மேல் துவிதியை திதி.
நட்சத்திரம்: பூரம் நட்சத்திரம் இரவு (1.08)க்கு மேல் உத்திரம்.
யோகம்: சித்தயோகம் இரவு (1.08)க்கு மேல் அமிர்தயோகம். கீழ்நோக்குநாள்.
சூலம்: மேற்கு
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை
எமகண்டம்: மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை
நல்ல நேரம்: காலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை மற்றும் மதியம் 2.00 மணி முதல் 3.00 மணி வரை
இன்றைய முக்கிய நிகழ்வுகள்:
கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீஅனுமருக்கு திருமஞ்சன சேவை. காரமடை ஸ்ரீஅரங்கநாதர் குதிரை வாகனத்தில் பாரிவேட்டை, எழுந்தருளல். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம். திருவல்லிக்கேணி குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சனம். நத்தம் மாரியம்மன் பாற்குடக் காட்சி. கோவை கோணியம்மன் காமதேனு வாகனத்தில் பவனி. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் தீர்த்தவாரி, ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.
இன்றைய தினப்பலன்:
மேஷம்: நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். பிள்ளைகளால் பெருமை சேரும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். புதியவர்களின் நட்பால் பொருளாதார நிலை உயரும். பயணம் பலன் தரும்.
ரிஷபம்: நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் நன்மை ஏற்படும். பழைய வாகனங்ளை மாற்றி புதிய வாகனங்களை வாங்கலாமா என்று சிந்திப்பீர்கள்.
மிதுனம்: மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். சொத்துகளில் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.
கடகம்: வருமானம் உயரும் நாள். வழக்குகள் நல்ல முடிவிற்கு வரும். மற்றவர்களுக்காக எடுத்த முயற்சியில் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் விடுமுறை நாளிலும் வேலை பார்க்கும் சூழ்நிலை உண்டு.
சிம்மம்: விமர்சனங்களால் ஏற்பட்ட விரிசல் அகலும் நாள். வீட்டுப்பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. திருமணத்தடை அகலும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
கன்னி: தனவரவு திருப்தி தரும் நாள். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள். எடுத்த செயலை எளிதில் முடிக்கும் ஆற்றல் பிறக்கும். உடன்பிறப்புகள் உங்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வருவர்.
துலாம்: பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். பாக்கிகள் வசூலாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளும் வந்து சேரலாம். பயணங்களால் ஆதாயம் உண்டு.
விருச்சிகம்: பக்கத்தில் உள்ளவர்கள் பக்க பலமாக இருக்கும் நாள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். பல நாட்களாக பிரிந்திருந்த ஒருவர் உங்களைத்தேடி வரலாம். தொழில் வளர்ச்சி உண்டு.
தனுசு: தாராளமாக செலவிட்டு மகிழும் நாள். தக்க சமயத்தில் நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். எதிர்பாராத விதத்தில் இடமாற்றம், ஊர் மாற்றங்கள் வந்து சேரலாம். ஆரோக்கியத்தொல்லை அகலும்.
மகரம்: காரிய வெற்றிக்கு கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டிய நாள். விரயங்கள் கூடும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. பக்குவமாக பேசுபவர்கள்கூட இன்று படபடப்பாக பேசலாம்.
கும்பம்: சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் பிரச்சினைகள் தலைதூக்கும். பொருளாதாரப் பற்றாக்குறையால் சில காரியங்களை செய்ய இயலாது. உத்தியோகத்தில் மிகுந்த விழிப்புணர்ச்சி தேவை.
மீனம்: நினைத்தது நிறைவேறும் நாள். எதிரிகள் விலகுவர். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். தொழில் ரீதியான பயணமொன்றை மேற்கொள்வீர்கள். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும்.
சந்திராஷ்டமம்: மகரம்.