இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
கன்னி ராசிக்காரர்களுக்கு வளர்ச்சிப்பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள்.
இன்றைய பஞ்சாங்கம்:
சோபகிருது வருடம் மாசி மாதம் 14-ந்தேதி திங்கட்கிழமை.
திதி: துவிதியை திதி இரவு(10.28)க்கு மேல் திருதியை திதி.
நட்சத்திரம்: உத்திரம் நட்சத்திரம் இரவு(3.40)க்கு மேல் அஸ்தம் நட்சத்திரம்.
யோகம்: சித்தயோகம். முகூர்த்தநாள். மேல்நோக்குநாள்.
சூலம்: கிழக்கு
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை
நல்ல நேரம்: காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை
இன்றைய முக்கிய நிகழ்வுகள்:
திருமயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர், திருவான்மியூர் திரிபுரசுந்தரியம்பாள் சமேத மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் அராளகேசியம்பாள் சமேத ரத்தினகிரீஸ்வரர் தலங்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம் அலங்காரம். கோவை கோணியம்மன் வெள்ளி யானை வாகனத்தில் வீதி உலா. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். குடந்தை ஸ்ரீசாரங்கபாணி விடையாற்றி உற்சவம் ஆழ்வார்திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் பவனி. இன்று சுபமுகூர்த்த தினம்.
இன்றைய தினப்பலன்:
மேஷம்: குதூகலம் அதிகரிக்கும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் திருப்தி தரும். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். உறவினர்களால் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். இடம், பூமி வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.
ரிஷபம்: வருமானம் திருப்தி தரும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்குவர். ஆடை, ஆபரணப்பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் முன்னேற்றம் ஏற்படும். பயணம் பலன் தரும்.
மிதுனம்: கடன்சுமை குறையும் நாள். காலை நேரம் வரும் அலைபேசி நல்ல தகவலைத்தரும். நீண்டதூரப் பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் நிறைவேறும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும்.
கடகம்: தனவரவில் ஏற்பட்ட தடைகள் அகலும் நாள். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். தேக ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.
சிம்மம்: பணிகளை விரைந்து முடிக்கும் நாள். பக்கபலமாக இருக்கும் நண்பர்கள் உதவி செய்வர். கவுரவம். அந்தஸ்து உயரும். பிள்ளைகளால் பெருமை சேரும். பூர்வீக சொத்துத் தகராறுகள் அகலும்.
கன்னி: நண்பர்களின் சந்திப்பால் நலம் கிடைக்கும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்களின் ஒத்துழைப்பால் கூட்டு முயற்சி வெற்றி பெறும். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
துலாம்: தேவைகள் பூர்த்தியாகும் நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர். உத்தியோகத்தில் பதவி உயர்வு காரணமாக குடும்பத்தை விட்டு விலகிச் சென்று பணிபுரியும் வாய்ப்பு உண்டு.
விருச்சிகம்: யோகமான நாள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். வரன்கள் வாயில் தேடி வரும். உத்தியோகத்தில் உங்களிடம் மேலதிகாரிகள் இணக்கமாக நடந்துகொள்வர்.
தனுசு: இடமாற்றங்களால் இனிய மாற்றங்கள் ஏற்படும் நாள். உறவினர் பகை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது. புதிய தொழில் தொடங்குவதில் தாமதம் ஏற்படும். உத்தியோக முயற்சியில் குறுக்கீடுகள் உண்டு.
மகரம்: காலையில் சலசலப்பும் மாலையில் கலகலப்பும் ஏற்படும் நாள். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். உடல்நலம் சீராகும். உத்தியோக மாற்றம் செய்வது பற்றி சிந்திப்பீர்கள். வரன்கள் வாயில் தேடி வரலாம்.
கும்பம்: வளர்ச்சி கூட வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். நண்பர்களால் விரயம் உண்டு. கோபத்தைக் குறைத்துக்கொண்டு செயல்படுவது நல்லது. உடல்நலத்தில் கூடுதல் கவனம் தேவை.
மீனம்: யோகமான நாள். புதிய முயற்சி வெற்றி தரும். வியாபாரப் போட்டிகளை சமாளிப்பீர்கள். முன்னோர் சொத்துகளில் முறையாக லாபம் கிடைக்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.
சந்திராஷ்டமம்: காலை 7.45 வரை மகரம். பிறகு கும்பம்.