இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x
தினத்தந்தி 27 Feb 2024 6:50 AM IST (Updated: 27 Feb 2024 7:45 AM IST)
t-max-icont-min-icon

துலாம் ராசிக்காரர்களுக்கு சுபவிரயங்கள் ஏற்படும் நாள்.

இன்றைய பஞ்சாங்கம்:

சோபகிருது வருடம் மாசி மாதம் 15-ந்தேதி செவ்வாய்க்கிழமை.

திதி: திருதியை திதி இரவு(12.23)க்கு மேல் சதுர்த்தி திதி.

நட்சத்திரம்: அஸ்தம் நட்சத்திரம் (60.00) நாள் முழுவதும்.

யோகம்: சித்தயோகம். கரிநாள்.

சூலம்: வடக்கு

ராகுகாலம்: மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம்: காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை

நல்ல நேரம்: காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

இன்றைய முக்கிய நிகழ்வுகள்:

காரமடை ஸ்ரீ அரங்கநாதர் சாற்றுமுறை. நத்தம் மாரியம்மன் பொங்கல் பெருவிழா. எரிபத்த நாயனார் குருபூஜை. சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருவாரூர் தியாகராயர் உற்சவம் ஆரம்பம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக் கோட்டை கோவில்களில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். கோவை கோனியம்மன் திருக்கல்யாணம். சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். ஆழ்வார்திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார பவனி.

இன்றைய தினப்பலன்:

மேஷம்: கடமையில் கண்ணும் கருத்துமாக செயல்படும் நாள். மாற்றுக்கருத்துடையோர் மனம் மாறுவர். பாக்கிகள் வசூலாகும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். உறவினர்களின் உதவி கிட்டும்.

ரிஷபம்: நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்ளும் நாள். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும். கடிதம் கனிந்த தகவல் தரும். வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருந்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

மிதுனம்: மனக்கலக்கம் அகலும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். சந்திக்கும் நண்பர்களால் சந்தோஷம் ஏற்படும். அரைகுறையாக நின்ற பணியை செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு.

கடகம்: எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். பணம் பலவழிகளிலும் வந்து பையை நிரப்பும். குடும்பத்தாருடன் குதூகலப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்: வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு உண்டு.

கன்னி: பாதியில் நின்ற பணிகள் மீதியும் முடியும் நாள். பெற்றோர் நலனில் அக்கறை தேவை. அடிக்கடி தொல்லை கொடுக்கும் வாகனத்தை மாற்றி அமைத்துக் கொள்வது பற்றி சிந்திப்பீர்கள்.

துலாம்: வம்பு வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர். பொருளாதார நிலை உயரும். உத்தியோக முன்னேற்றம் கருதி முக்கிய புள்ளிகளை சந்திப்பீர்கள்.

விருச்சிகம்: வியக்கும் செய்தி வீடு வந்து சேரும் நாள். சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். இடம், பூமியால் லாபம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கேட்ட சலுகைகளை வழங்குவர்.

தனுசு: அதிக விரயத்தால் அல்லல் ஏற்படும் நாள். அலைச்சல் கூடும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்சினைகள் வந்து அலைமோதும்.

மகரம்: கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள். கூடப் பிறந்தவர்களின் உதவி கிட்டும். மனதிற்கினியவர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி கூடும். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு.

கும்பம்: விமர்சனங்களால் விரிசல் ஏற்படும் நாள். வாகனங்களில் செல்லும்பொழுது கவனம் தேவை. ஆதாயமில்லாத அலைச்சல்கள் ஏற்படும். மனச்சோர்வு அதிகரிக்கும். தொழில் கூட்டாளிகள் தொல்லை தருவர்.

மீனம்: குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழும் நாள். புதிய தொழில் தொடங்கலாமா என்று சிந்திப்பீர்கள். அரசியல்வாதிகளின் ஆதரவோடு புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.

சந்திராஷ்டமம்: கும்பம்.


Next Story