இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
கோவை கோணியம்மன் இந்திர விமானத்தில் தெப்பம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மாசி 18 (வெள்ளிக்கிழமை)
திதி: சஷ்டி இரவு 3.50 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம்: சுவாதி காலை 9.37 மணி வரை பிறகு விசாகம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை
எமகண்டம்: மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை
முக்கிய நிகழ்வுகள்
கோவை கோணியம்மன் இந்திர விமானத்தில் தெப்பம். காங்கேயம் முருகன் லட்ச தீப காட்சி. கார்த்திகை, உத்ரம், உத்ராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு காரிய வெற்றி ஏற்படும் நாள்.
ராசிபலன்
மேஷம்
பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். நண்பர் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தியொன்று வந்து சேரும், உத்தியோகத்தில் தொல்லை தந்த மேலதிகாரிகள் இடமாற்றம் பெறுவர்.
ரிஷபம்
கொள்கைப்பிடிப்போடு செயல்படும் நாள். கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். வாழ்க்கைத்தரம் உயரும். திருமண முயற்சி கைகூடும். பயணம் பலன்தரும்.
மிதுனம்
பெற்றோர் வழியில் ஆதரவு கிடைக்கும் நாள். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டுவந்து சேர்ப்பர், உத்தியோகத்தில் உடன் பணிபுரியவர்களால் ஏற்பட்ட உபத்திரவங்கள் அகலும். வருமானம் திருப்தி தரும்.
கடகம்
பொருளாதார நிலை உயரும் நாள். தொழில் கூட்டாளிகளால் நன்மை உண்டு. குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய பொறுப்புகள் தேடி வரும். ஆலய வழிபாடு ஆனந்தம் தரும்.
சிம்மம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். நண்பர்களின் ஆதரவு உண்டு. பாக்கிகளை வசூலிக்க எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
கன்னி
கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். எப்படி நடக்குமோ என்று நினைத்த காரியம் நல்ல விதமாக நடைபெறும். உடல் நலனில் கவனம் தேவை. தொழில் ரகசியங்களை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது.
துலாம்
பக்குவமாகப் பேசிப் பாராட்டுகளைப் பெறும் நாள். பயணங்களால் பலன் கிடைக்கும். உறவினர் சிலர் உதவி கேட்டு வருவர். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். சுபச்செலவு உண்டு.
விருச்சிகம்
சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். தொலைபேசி வழித்த கவல் மகிழ்ச்சியைத் தரும். பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டு. தொழில் வளர்ச்சி கருதி முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள்.
தனுசு நல்ல சம்பவங்கள் நடைபெறும் நாள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். வீடு கட்டும் பணியில் விருப்பம் காட்டுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். வாகன யோகம் உண்டு.
மகரம்
யோகமான நாள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் எண்ணம் உருவாகும். புண்ணிய காரியங்களில் நாட்டம் செலுத்துவீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்று வீர்கள். உடல்நலம் சீராகும்.
கும்பம்.
திறமைகள் பளிச்சிடும் நாள். தெய்வத் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். மருத்துவச் செலவுகள் குறையும். தொழில் நலன் கருதிப் புதிய பங்குதாரர்களைச் சேர்க்க முன்வருவீர்கள்.
மீனம்
விரயங்கள் மேலோங்கும் நாள். உணர்ச்சிவசப்படுவதால் உறவு பகையாகும். உத்தியோகத்தில் வீண்பழிகள் ஏற்படலாம். தொலைபேசி வழித்தகவல் தொல்லை தருவதாக அமையும்.