இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x

மகர ராசிகாரர்களுக்கு தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள்.

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, மாசி 21 (திங்கட்கிழமை)

திதி: நவமி இரவு 2.48 மணி வரை பிறகு தசமி

நட்சத்திரம்: கேட்டை பகல் 11.28 மணி வரை பிறகு மூலம்

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை

எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை

சூலம்: கிழக்கு

நல்ல நேரம்: காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

முக்கிய நிகழ்வுகள்

திருவாரூர் தியாகராஜர் பவனி. திருத்தணி முருகன் பாலாபிஷேகம். சங்கரன்கோவில் கோமதியம்மன் மலர்ப் பாவாடை தரிசனம். மகர ராசிகாரர்களுக்கு தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள்.

ராசிபலன்

மேஷம்

சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். அக்கம் பக்கத்து வீட்டாருடன் அளவாகப் பழகுவது நல்லது. பணப்புழக்கம் அதிகரித்தாலும் அடுத்தடுத்த செலவுகளால் மனக்குழப்பம் ஏற்படலாம்.

ரிஷபம்

மதியத்திற்கு மேல் மகிழ்ச்சி குறையும் நாள். எதையும் திட்டமிட்டுச்செய்ய இயலாது. நிதானத்தைக் கடைப் பிடித்தால் நிம்மதி கிடைக்கும். எதிர்பாராத செலவுகள் உண்டு. கொடுக்கல் வாங்கல்களில் ஏமாற்றம் ஏற்படும்.

மிதுனம்

முன்னேற்றம் கூடும் நாள். முக்கியப் புள்ளிகளின் உதவியோடு தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய் வழி உறவினர்களால் நன்மை உண்டு. சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும்.

கடகம்

உற்சாகத்துடன் செயல்படும் நாள். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான அறிகுறி தோன்றும். உடன்பிறப்புகள் ஒத்துழைப்புச் செய் வர். பயணத்தால் ஆதாயம் உண்டு.

சிம்மம்

தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள், பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.

கன்னி

போன் மூலம் பொன்னான தகவல் கிடைக்கும் நாள். வாங்கல் கொடுக்கல்கள் ஒழுங்காகும். பயணத்தால் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும்.

துலாம்

அலைபேசி மூலம் அனுகூலச் செய்திகள் வந்து சேரும் நாள். வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் வழிவகுத்துக் கொடுப்பர். கல்யாண முயற்சி கைகூடும்.

விருச்சிகம்

வி.ஐ.பிக்களைச் சந்தித்து மகிழும் நாள். விழாக்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள், புகழ் கூடும். பொருளாதார நிலை உயரும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.

தனுசு

மகிழ்ச்சி கூடும் நாள். புகழ் மிக்கவர்களின் சந்திப்பால் வருமானம் உயர வழிபிறக்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். தொழிலில் புதிய கூட்டாளிகளைச் சேர்க்க நினைப்பீர்கள்.

மகரம்

வருமானம் உயரும் நாள். வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மறதியால் விட்டுப் போன பணிகளை இன்று செய்து முடிப்பீர்கள்.

கும்பம்

அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். குடும்ப முன்னேற்றம் கூடும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். பழைய பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு.

மீனம்

தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். செயல்பாடுகளில் வெற்றி கிட்டும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.


Next Story