இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
தனுசு ராசிக்காரர்களுக்கு பயணங்களால் பலன் கிடைக்கும் நாள்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மாசி 22 (செவ்வாய்க்கிழமை)
திதி: தசமி இரவு 1.32 மணி வரை பிறகு ஏகாதசி
நட்சத்திரம்: மூலம் பகல் 11.08 மணி வரை பிறகு பூராடம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை
முக்கிய நிகழ்வுகள்
ஸ்ரீபெரும்புதூர் மணவாள் மாமுனிகள் புறப்பாடு. ராமநாதபுரம் செட்டிதெரு முத்தாலம்மன் வீதி உலா. தனுசு ராசிக்காரர்களுக்கு பயணங்களால் பலன் கிடைக்கும் நாள்.
ராசிபலன்
மேஷம்
புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். முயற்சித்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். பணப்பொறுப்புகளை மற்றவர்களிடம் யோசித்து ஒப்படைப்பது நல்லது. உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
ரிஷபம்
விரயங்கள் அதிகரிக்கும் நாள். தொழில் குறுக்கீடுகள் உண்டு, உத்தியோக மாற்றம் உறுதியாகலாம். உறவினர் பகை உண்டு, பயணங்களால் இடையூறுகள் ஏற்படும். அருகிலிருப்பவர்களின் ஆதரவு குறையும்.
மிதுனம்
பொழுது விடியும் பொழுதே பொன்னான தகவல் கிடைக்கும் நாள், வியாபார நலன் கருதி எடுத்த முயற்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லை அகலும்.
கடகம்
உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு ஏற்படும் நாள். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட சலுகை கிடைக்கும்.
சிம்மம்
வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் நாள். நேற்று பாதியில் நின்ற நாள். பக்கத்தில் இருந்தவர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.
கன்னி
உதிரி வருமானங்கள் பெருகும் நாள், உள்ளத்தில் மகிழ்ச்சி கூடும். உறவினர்களின் ஒத்துழைப்போடு ஒரு நல்ல காரியத்தை செய்து முடிப்பீர்கள். கூட்டு முயற்சி வெற்றி தரும். தொழிலில் லாபம் உண்டு.
துலாம்
சச்சரவுகள் அகலும் நாள். தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெறிவது நல்லது. பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனங்கள் வாங்க நினைப்பீர்கள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.
விருச்சிகம்
முன்னேற்றம் கூடும் நாள். முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்போடு தொழில் வளர்ச்சி காண்பீர்கள். லாபம் எதிர்பார்த்தபடியே வந்துசேரும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. கல்யாண முயற்சி கைகூடும்.
தனுசு
சொல்லை செயலாக்கிக் காட்டும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். அரசாங்க உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சி பலன் தரும்.
மகரம்
விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். சுணங்கிய காரியம் சுறுசுறுப்பாக நடைபெறும். பணக்கவலை தீரும். பக்கபலமாக இருப்பவர்கள் உங்களுக்கு நல்ல தகவலை தருவர். தொழில் சீராக நடைபெறும்.
கும்பம்
நல்ல சந்தர்ப்பம் நாடிவரும் நாள். நண்பர்களின் உதவியோடு புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வருமானம் திருப்தி தரும். தொழில் வளர்ச்சிக்காக புதிய கூட்டாளிகளை சேர்க்க நினைப்பீர்கள்.
மீனம்
வரன்கள் வாயில் தேடி வரும் நாள். நண்பர்கள் உதவியோடு புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வருமானம் திருப்தி தரும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும், தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.