இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x

வெற்றிகள் குவிய விஷ்ணுவை வழிபட வேண்டிய நாள்.

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, மாசி 23 (புதன்கிழமை)

திதி: ஏகாதசி இரவு 11.54 மணி வரை பிறகு துவாதசி

நட்சத்திரம்: பூராடம் பகல் 10.25 மணி வரை பிறகு உத்ராடம்

யோகம்: அமிர்தயோகம்

ராகுகாலம்: மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை

சூலம்: வடக்கு

நல்ல நேரம்: காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

முக்கிய நிகழ்வுகள்

ராமேசுவரம் ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்மன் தங்க விருஷப சேவை. ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளல்-திருமஞ்சனம். ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரானுக்கு பலாபிஷேகம். வெற்றிகள் குவிய விஷ்ணுவை வழிபட வேண்டிய நாள்.

ராசிபலன்

மேஷம்

கொள்கைப்பிடிப்போடு செயல்படும் நாள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் அகலும், அன்னிய தேசத்திலிருந்து வரும் தகவல் அனுகூலமாக இருக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

ரிஷபம்

சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும் மற்றவர்களுக்கு வாக்கு கொடுக்கும் பொழுது யோசிப்பது நல்லது. குடும்பத்தில் வீணான குழப்பங்கள் தோன்றும் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மிதுனம்

மாலை நேரத்தில் மகிழ்ச்சி குறையும் நாள். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. திடீர் விரயம் உண்டு. ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

கடகம்

சந்தோஷம் அதிகரிக்கும் நாள். குடும்ப நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். புதுமனை கட்டிக் குடியேறும் எண்ணம் மேலோங்கும். உத்தியோக முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

துலாம்

காரிய வெற்றி ஏற்படும் நாள். கடமை உணர்வோடு செயல்படு வீர்கள். புதிய பொறுப்புகளும், பதவிகளும் உங்களை நாடிவரும். பெரிய மனிதர்களின் சந்திப்பு உண்டு. விவாக பேச்சுகள் முடிவிற்கு வரும்.

விருச்சிகம்

பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். ஆன்மிக பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.

கடகம்

சந்தோஷம் அதிகரிக்கும் நாள். குடும்ப நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். புதுமனை கட்டிக் குடியேறும் எண்ணம் மேலோங்கும். உத்தியோக முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

சிம்மம்

பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். எதிர்கால நலன் கருதி சேமிப்பீர்கள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

கன்னி

அன்பு நண்பர்களின் சந்திப்பால் ஆனந்தம் பெருகும் நாள். இழுபறியான வழக்குகளில் வெற்றி கிடைக்கும். இல்லத்தில் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். தொழில் தொடர்பாக முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள்.

தனுசு

ஆதாயம் அதிகரிக்கும் நாள். பொருளாதார நலன் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத இடமாற்றங்கள், இலாகா மாற்றங்கள் ஏற்படலாம். தொழில் முன்னேற்றம் உண்டு.

மகரம்

பணவரவு திருப்தி தரும் நாள். பாசம் மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் முன்னேற்றத்திற்கு உதவிய சிலரை சந்தித்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

கும்பம்

சாமர்த்தியமாகப்பேசி காரியங்களை சாதிக்கும் நாள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கூட இருப்பவர்களின் ஒத்துழைப்பு திருப்தி தரும்.

மீனம்

குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். வெளிநாட்டு தொடர்பு நன்மை தரும். வரன்கள் வாயில் தேடி வரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.


Next Story