இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
மகர ராசிக்காரர்களுக்கு நினைத்தது நிறைவேறும் நாள்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மாசி 24 (வியாழக்கிழமை)
திதி: துவாதசி இரவு 9.50 மணி வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம்: உத்ராடம் காலை 9.21 மணி வரை பிறகு திருவோணம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: மதியம் 1.30 மணி முதல் 3.00 மணி வரை
எமகண்டம்: காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை மாலை 5.00 மணி முதல் 6.0 0 மணி வரை
முக்கிய நிகழ்வுகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியபெருமாள் புறப்பாடு. திருப்பதி ஏழுமலையான் மலரங்கி சேவை. சுவாமிமலை முருகன் தங்கக் கவசம்-வைரவேல் தரிசனம். மகர ராசிக்காரர்களுக்கு நினைத்தது நிறைவேறும் நாள்.
ராசிபலன்
மேஷம்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டு. வியாபார விருத்தியுண்டு. கடன் சுமை குறையப் புதிய வழிபிறக்கும்.
ரிஷபம்
ஆதாயம் எதிர்பார்த்தபடி வந்து சேரும் நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக்கொள் வீர்கள். பால்ய நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி கூடும். தொழிலில் முன்னேற்றம் உண்டு.
மிதுனம்
மனக்குழப்பம் ஏற்படும் நாள். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. திடீர் செலவுகளைச் சமாளிப்பீர்கள். உத் தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
கடகம்
சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும் நாள். உதிரி வருமானங்கள் வந்து சேரும். வெளிவட்டாரப் பழக்க வழக் கம் விரிவடையும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.
சிம்மம்
தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். தனவரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மனதில் இடம்பிடிப்பீர்கள்.
கன்னி
யோகமான நாள். உள்ளம் மகிழும் செய்தியொன்றை உடன்பிறப்புகள் வழியில் கேட்கலாம். இடம், பூமி வாங்க விற்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். நீண்ட நாட்களாக நடை பெறாத காரியம் இன்று நடைபெறும்.
துலாம்
வைராக்கியத்தோடு செயல்பட்டு வாக்குறுதியை நிறைவேற்றும் நாள். வருங்கால நலன் கருதி பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள்.
விருச்சிகம்
விருப்பங்கள் நிறைவேறும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும். தொழிலில் எதிர்பார்த்தபடியே லாபம் உண்டு. தூரதேசத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும்.
தனுசு
வரவு இருமடங்காகும் நாள். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.
மகரம்
பயணங்கள் பலன் கிடைக்கும் நாள். வீடு மாற்றம். இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தொழில் பங்குதாரர்களிடம் கவனம் தேவை. உத்தியோகத்தில் உங்கள் நிர்வாகத் திறமைக்கு பாராட்டு கிடைக்கும்.
கும்பம்
மனச்சுமை குறையும் வழிவகை செய்துகொள்ளும் நாள். மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு. மற்றவர்களுக்காக வாங்கிக்கொடுத்த தொகை வந்து சேரலாம். உத்தியோகத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மாறும்.
மீனம்
யோகமான நாள், நண்பர்களிடம் சாமர்த்தியமாகப்பேசி காரியங் களை சாதித்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களிடம் உங்கள் முன்னேற்றத்தைப் பற்றி தெரிவிக்க வேண்டாம்.