இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
மேஷ ராசிக்காரர்களுக்கு சுபச்செலவுகள் அதிகரிக்கும் நாள்.
இன்றைய பஞ்சாங்கம்:
சோபகிருது வருடம் மாசி மாதம் 26-ந்தேதி சனிக்கிழமை.
திதி: சதுர்த்தசி திதி மாலை(5.33)க்கு மேல் அமாவாசை திதி.
நட்சத்திரம்: அவிட்டம் நட்சத்திரம் காலை(6.31)க்கு மேல் சதயம் நட்சத்திரம்.
யோகம்: சித்தயோகம் பின்இரவு(4.54)க்கு மேல் அமிர்தயோகம். மேல்நோக்குநாள்.
சூலம்: கிழக்கு
ராகுகாலம்: காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: மதியம் 1.30 மணி முதல் 3.00 மணி வரை
நல்ல நேரம்: காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை
இன்றைய முக்கிய நிகழ்வுகள்:
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜருக்கு திருமஞ்சனம். திருவாரூர் தியாகராஜர் பவனி. ராமநாதபுரம் முத்தாலம்மன் திருவீதி உலா. குச்சனூர் சனிபகவான் சிறப்பு அபிஷேகம். கோச் செங்கட்சோழ நாயனார் குருபூஜை. உப்பிலியப்பன் கோவில் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சனம். ஸ்ரீசைலம், ஸ்ரீ காளஹஸ்தி, திருக்கோகர்ணம் கோவில்களில் சிவபெருமான் ரதோற்சவம்.
இன்றைய தினப்பலன்:
மேஷம்: கல்யாண முயற்சிகள் கைகூடும் நாள். காலை நேரத்தில் நல்ல தகவல் வந்து சேரும். மாற்றுக்கருத்துடையோர் மனம் மாறுவர். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள்.
ரிஷபம்: பம்பரம்போல் சுழன்று பணிபுரியும் நாள். ஆதரவுக்கரம் நீட்டுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். அலைபேசி வழியில் அனுகூலமான தகவல் உண்டு. உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.
மிதுனம்: வாழ்க்கைத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். அரசியல்வாதிகளால் அனுகூலம் ஏற்படும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பரவசம் அடைவீர்கள். உத்தியோகத்தில் ஏற்பட்ட வீண் பழியிலிருந்து விடுபடுவீர்கள்.
கடகம்: யோசித்துச்செயல்பட வேண்டிய நாள். பிறருக்கு பொறுப்பு சொல்வதைத் தவிர்க்கவும். திடீர் செலவுகளைச் சமாளிக்க பிறரிடம் கைமாத்து வாங்கும் சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும்.
சிம்மம்: உதிரியாகக் கிடந்த உறவுகள் ஒட்டிக்கொள்ளும் நாள். தொழில் தொடங்கும் முயற்சிக்கு கூட்டாளிகள் ஒத்துவருவர். பணத்தேவைகள் பூர்த்தியாகும். இடம் வாங்கும் முயற்சி கைகூடும்.
கன்னி: உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும் நாள். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். கடன்பிரச்சினைகளை சாமர்த்தியமாகப்பேசி சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
துலாம்: முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். மூத்தவர்களின் ஆலோசனை கைகொடுக்கும். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். நண்பர்களின் ஒத்துழைப்போடு புது முயற்சியொன்றில் ஈடுபடுவீர்கள்.
விருச்சிகம்: புகழ்மிக்கவர்களைச் சந்தித்து மகிழும் நாள். பொருளாதார நிலை உயரும். பயணத்தால் பலன் கிடைக்கும். வீடு வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.
தனுசு: நல்ல தகவல் கிடைத்து உள்ளம் மகிழும் நாள். குடும்பப் பொறுப்புகள் கூடும். புதிய சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் அலுவலகத் தகவல்களை வெளியில் சொல்ல வேண்டாம்.
மகரம்: அலைபேசி வழியில் ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.எதிர்கால நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். கைநழுவிச் சென்ற வரன்கள் மீண்டும் வந்து சேரலாம்.
கும்பம்: பெருமைகள் வந்து சேரும் நாள். பிரச்சினைகள் படிப்படியாக முடிவிற்கு வரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சந்திக்கும் நண்பர் ஒருவர் தொழில் முயற்சிக்கு உறுதுணைபுரிவார்.
மீனம்: மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாள். தொழில் மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். எந்த முக்கிய முடிவையும் யோசித்து எடுப்பது உத்தமம். அச்சுறுத்தும் நோய் அகல மருத்துவ ஆலோசனைகளைப் பெறலாம்.
சந்திராஷ்டமம்: கடகம்.