இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x
தினத்தந்தி 10 March 2024 6:53 AM IST (Updated: 10 March 2024 9:18 AM IST)
t-max-icont-min-icon

விருச்சிக ராசிக்காரர்களுக்கு முன்னோர் வழிபாட்டில் முன்னேற்றம் காண வேண்டிய நாள்.

இன்றைய பஞ்சாங்கம்:

சோபகிருது வருடம் மாசி மாதம் 27-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை.

திதி: அமாவாசை திதி மாலை(3.11)க்கு மேல் பிரதமை திதி.

நட்சத்திரம்: பூரட்டாதி நட்சத்திரம் இரவு(3.16)க்கு மேல் உத்திரட்டாதி நட்சத்திரம்.

யோகம்: சித்தயோகம் இரவு(3.16)க்கு மேல் அமிர்தயோகம். கீழ்நோக்குநாள்.

சூலம்: மேற்கு

ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை

எமகண்டம்: மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை

நல்ல நேரம்: காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் மதியம் 2.00 மணி முதல் 3.00 மணி வரை

இன்றைய முக்கிய நிகழ்வுகள்:

ராமநாதபுரம் முத்தாலம்மன் பவனி. ராமேசுவரம், வேதாரண்யம், திருவள்ளூர் கோவில்களில் பித்ரு பூஜை செய்ய நன்று. இருக்கன்குடி மாரியம்மன், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் சிறப்பு அபிஷேகம். ராமேசுவரம் சுவாமி, அம்பாள் இந்திர விமானத்தில் இரவு தங்க விருஷப சேவை. சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். ஸ்ரீ சைலம், திருவைகாவூர் கோவில்களில் சிவபெருமான் திருக்கல்யாணம். இன்று சர்வ அமாவாசை.

இன்றைய தினப்பலன்:

மேஷம்: அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். அரைகுறையாக நின்ற பணிகள் முடிவடையும். பிள்ளைகள் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக்கொடுப்பர். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.

ரிஷபம்: தன்னம்பிக்கையோடு செயல்படும் நாள். கைவிட்டுப்போன பொருள் கைக்கு வந்து சேரும். கூட்டு வியாபாரம் உற்சாகத்தைக் கொடுக்கும். உத்தியோக முயற்சியில் இருந்த தடை விலகும்.

மிதுனம்: திறமை பளிச்சிடும் நாள். திடீர் வரவு உண்டு. நண்பர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். தொழில்ரீதியான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.

கடகம்: பாசம் காட்டுபவர்களின் வேஷம் கலையும் நாள், பணப்பிரச்சினை அதிகரிக்கும். வேலையாட்களால் மன நிம்மதி குறையலாம். செய்தொழிலில் ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். பயணங்களில் கவனம் தேவை.

சிம்மம்: நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்க்கும் நாள். தொழில்ரீதியாக வெளியூர் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம் பெறுவீர்கள்.

கன்னி: யோசித்துச் செயல்பட வேண்டிய நாள், சிக்கனத்தைக் கையாளும் எண்ணம் மேலோங்கும். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் தோன்றி மறையும். வாங்கிய கடனை அடைக்க மறு கடனை வாங்கும் சூழ்நிலை ஏற்படும்.

துலாம்: தேவைகள் பூர்த்தியாகும் நாள். நாணயமும், நம்பிக்கையும் கொண்ட நண்பர்களின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ள நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். பயணம் பலன் தரும்.

விருச்சிகம்: வெற்றி வாய்ப்புகள் வீடுதேடி வரும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அழைப்புகள் வந்து சேரும். பணவரவு திருப்தி தரும்.

தனுசு: வசதிகள் பெருகும் நாள். வருமானம் திருப்தி தரும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.

மகரம்: தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். தன்னம்பிக்கையோடு பணியாற்றுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். விவாகப் பேச்சுகள் முடிவாகும். வீடு, மனை வாங்கும் திட்டங்கள் நிறைவேறும்.

கும்பம்: ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். அன்றாடப் பணிகள் நன்றாக நடைபெற அமைதியைக் கடைப்பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் சக பணியாளர்களின் தொல்லையுண்டு.

மீனம்: துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். தொழிலை விரிவு செய்யும் முயற்சி கைகூடும். உத்தியோக மாற்றம் பற்றிய தகவல் உறுதியாகலாம். எதிர்காலத்தைப் பற்றிய பயம் அகலும்.

சந்திராஷ்டமம்: இரவு 9.32 வரை கடகம்; பிறகு சிம்மம்.


Next Story